பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

தெலுங்கு நாட்டில் ஒரு பகுதி ஆகியவற்றிலும் ஆணை செலுத்தி வந்தார்கள்.

சேரர் :-சோழர் மொழிக்கும் பாண்டியர் மொழிக்கும் வேறுபாடில்லை. எட்டாம் நூற்றாண்டிற்டிற்குரிய சிரிய, யூதியக் கல்வெட்டுக்களின் உதவி கொண்டு நோக்குமிடத்துச் சேரர் மொழியிலும் வேறுபாடிருந்ததாகக் காண்பதற்கில்லை. சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் ஆகிய மூவரும் திராவிடர்களே. அவர்கள் தமிழர்கள் அல்லது திராவிடர்கள் என்ற ஒரே பெயராலேயே வழங்கப்பட்டு வந்துள்ளனர்.

தமிழ்ப் பண்டைய வரலாற்றின்படி சேர, சோழ, பாண்டியர்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிக்கும் சிறுகதை யொன்றுண்டு : சேர, சோழ, பாண்டியர்கள் மூவரும் உடன்பிறந்தோர்கள். அவர்கள் முதலில் கொற்கை என்னுமிடத்தில் அரசுப புரிந்து வந்தனர். இக்கொற்கை தாமிரபர்ணி ஆற்றின் கரையில் உள்ளது. அவ் வாற்றின் கரையிலேயே தென்னிந்திய நாகரிகக் கலை வளர்ந்ததாகக் கூறலாம். உடன்பிறந்தோராகிய அம் மூவர்களும் பிரிய வேண்டிய காலம் வந்தது. பாண்டியன் கொற்கையிலேயே தங்கினன். சேரனும், சோழனும் வெளியிற் புறப்பட்டனர். இருவர்களும் முறையே சேர சோழ அரசுகளை நிலைநிறுத்தினர். இக் கதையினை யொத்த கதைகள் பல வடமொழி நூல்களிலுங் காணப்படுகின்றன. ஹரி வமிசத்தில், பாண்டியன், கேரளன், கோலன், சோழன் என் பவர்கள் ஆக்ரீடன் என்பவனுடைய பிள்ளைகளாவர் என்று குறிப்பிடப்படுகின்றனர். துஷ்யந்தனின் பிள்ளைகள் அவர் கள் என்று கூறுவாருமுளர். கோலர் என்ற இப் புதிய குடி யினர் யாவர்? கருநாடர்களே அவர்கள் என்று புராணங்கள் சில கூறும்; ஆயினும் அவர்கள் கோலேரிய மரபினரே என்று கொள்ளுதலே சால்புடைத்தாம்.