பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—கன்னடம்

41

வெட் டொன்றில் அரசர் குடி யொன்றைச் சேர்ந்தோர் தம்மைத் திரிகலிங்க அரசர் என்று கூறிக்கொண்டதாகக் கன்னிங்ஹாமும்[1] உரைக்கின்றனர். மாபாரதத்தில் மூவேறிடங்களில் மூவேறு குழுவினரைக் கலிங்கர் என அழைத்திருப்பதும், பிளைனி என்பார் கலிங்கருடன் மக்கோக் கலிங்கர், கங்கரிதேஸ் கலிங்கர் என்பவர்களைக் குறிப்பிட்டிருப்பதும் இதனை வலியுறுத்துவதாக அவர் கொள்கிறார்.

தெலுங்க நாட்டைப் பிளைனி மோடொகலிங்கம் எனவும் குறித்துள்ளார். இதில் மோடொக என்பது மூன்று என்ற பொருள்கொண்ட பழந் தெலுங்குச் சொல் என ஏ. டி. காம்பெல்[2] கொள்கிறார். ஆனால், இன்றைத் தெலுங்கில் மூன்று என்பதற்குச் சரியான மொழி மூடு என்பதே யாகும். மூடுகு என்பதுகூட உயர் இலக்கிய வழக்கேயாம். காம்பெலுக்கு மாறாக ஸி. பி. பிரௌன் என்பார் மோடொ கலிங்கத்தை மோடொ+கலிங்கம் எனப் பிரித்து மூன்று கலிங்கம் எனப் பொருள்படுத்துகிறார்.

தெலுங்கிற்குத் தமிழர் தந்த பெயர் வடுகு என்பதாகும். தெலுங்கர், அதிலும் சிறப்பாக, நாயக்க வழியைச் சேர்ந்தவர் வடுகர் எனப்படுவார். இதன் முதன்மொழி வட என்ற தமிழ்ச் சொல்லேயாகும். போர்த்துகேசியராலும் ஸெயின்ட் ஸேவியராலும்[3] குறிப்பிடப்பட்ட, படகேஸ், இவர்களேயாவர்.

IV. கன்னடம்

தெலுங்கு மொழிக்கு அடுத்தபடியாக இடம் பெறத் தக்கது கன்னடம். கர்நாடகம் என்றும், கானரீஸ் என்றும் அது வழங்கப் பெறும். மைசூர், தென் மராட்டிய நாடு, நிஜாம் நாட்டு மேலைக் கோட்டங்கள் சில, ஆகிய பகுதிகளில்


  1. General Cunningham.
  2. Mr. A. D Campbell
  3. St. Xavier.