பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—கோதம்; கோண்டு

47

குழந்தைகளைப் பிறந்தவுடன் கொன்றுவிடும் வழக்கம் ஒரு காலத்தில் கையாளப்பட் டிருந்தமையாலும் இவர்கள் தொகையில் அருகி, இன்று 700 அளவில் குறைந்திருக்கின்றனர். ஆயினும், இவர்கள் மொழி ஒப்பியல் மொழியிலக் கணத்திற்குப் பயன்படும் சிறப்புக்கள் உடையது.

துத அல்லது தொத என்பது தமிழ்த் தோழன் (கூட்டத்தான்) என்பதுடன் உறவுடையது என்று டாக்டர் போப் கொண்டனர். ஆனால், அஃது ஒப்புக்கொள்ளத் தக்கதன்று.

(II) கோதம் :

தொதவர்களே யன்றி, நீலகிரி மலையில் கோதர்கள் என்ற ஒரு சிறுகுடியினரும் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகளே யாவர். இவர்களின் தொகை ஏறக்குறைய 1200 ஆகும். பண்டை நாட்களிலிருந்த உயர்குடி மக்களால் துரத்தப்பட்டு இவர்கள் இங்கே வந்து குடியேறியவர்க ளாதல்வேண்டும். இவர்கள் மொழியாகிய கோதம் கன்னடத்தின் கொச்சைக்கிளை என்று ஒருவாறு கூறலாம். 1911-ஆம் ஆண்டு எடுத்த மக்கட்டொகைக் கணக்கின்படி அஸ்ஸாம் நாட்டில் ஒன்பதின்மர் கோதர் இருந்தார்களாம்.

இனி, இத் தொதவமும் கோதமுமேயன்றி, வடகர்கள் பேசும் ஒரு தனிப்பட்ட மொழியும், இருளர்கள் பேசும் தமிழ் மொழிச் சிதைவும், குறும்பர்கள் என்ற முல்லை நில மக்கள் பேசும் தமிழ்மொழிச் சிதைவும் நீலகிரி மலைத் தொடரில் வழங்குகின்றன.

(III) கோண்டு :

கோண்டர்கள் மத்திய இந்தியாவிலுள்ள குன்றுகளிலும் காடுகளிலும் உறையும் பழங்குடிகள் ஆவர். இவர்க