பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

ளது தொகை பதினைந்து நூறாயிரம் (15,00,000) ஆகும்.[1] இவர்கள் வாழும் பகுதியை முன்னைய ஆராய்ச்சியாளர் கோண்டவனம் என்றழைத்தனர். கோண்டர்கள் தாமே தம்மைக் குறிக்க வழங்கிய பெயர் கோயீதோர்[2] அதாவது கோயீக்கள் என்பதாகும். இவரிடையே 12 வகுப்புக்கள் உள்ளன. அவற்றுள் 4 வகுப்பினர் தம்மைச் சிறப்பாகக் கோயீதோர் என்று கூறிக்கொள்ளுகின்றனர். இவருள் ஒரு வகுப்பினர் கோஹிதூர் என்று தம்மைக் குறிக்கும் மாரியார் ஆவர். இவர்களே கோண்டர் அனைவரிலும் வீரமும் முரட்டுத் தனமும் மிக்கவர். கலப்பற்ற பழங்கோண்டர்களும் இவர்களே யாவர் என்று எண்ண இடமுண்டு.

(IV) கந்தம் அல்லது கு :

ஆங்கில அறிஞர் இவர்களைக் கொந்தர் என்று வழங்குகின்றனர். ஆனால் இவர்களை அடுத்துள்ளோர் இவர்களைக் கந்தர் என்றும், இவர்கள் தாமே தம்மைக் கு என்றும் வழங்குகின்றனர். இவர்கள் கோண்டவனத்தின் கிழக்குப் பக்கத்திலும், ஒரிஸ்ஸாவின் குன்றுகளிலும் உறைபவர்கள். கோண்டருடன் உறவுடையவர் இவர் என்று கருதப்படுகிறது. கோண்டர் என்ற பெயரும், கந்தர் என்ற இவர் பெயருங்கூடக் குன்று என்ற தமிழ்ச்சொல் அல்லது அதற்குச் சரியான கொண்ட என்ற தெலுங்குச் சொல்லிலிருந்து வந்ததெனச் சிலர் சொல்லுகின்றனர். ஆனால், இதற்கு


  1. கோண்டர்கள் பழங்குடி மக்கள்; ஆகையால் இக்காலத்துத் திருந்திய சமூக வாழ்க்கையில் இடம் பெறக் கூடாதவர் என்று தாழ்த்தி வைக்கப்பட்டிருந்த நிலைமையை ரீவாப் பேரரசர் நீக்கி, கோண்டர்கள் இனி க்ஷத்திரியர்களாகவே பாராட்டப்பட்டு, க்ஷத்திரியர்களுக்குரிய எல்லா உரிமைகளையும் பெறுவர் என்று கட்டளை பிறப்பித்துள்ளார்- (அஸோஸி யேட்டெட் பிரஸ்)
    - இந்தியன் எக்ஸ்பிரஸ் (19-2-41)
  2. Koitor