பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—திருந்தா மொழிகள்

51

இவற்றுள்ளும், ஒராவோன் இராஜ்மஹாலையும், கோலேரிய இனத்தையும் இணைப்பதென்றும், இராஜ்மஹால் அதேபோன்று ஒராவோனையும் திராவிட மொழிகளையும் இணைப்ப தென்றும் ஹாட்ஜ்ஸன் கொள்கிறார். எப்படியும் ஓராவோனைவிட இராஜ்மஹாலே திராவிடச் சார்பு மிகுதியு முடையதென்பது தேற்றம்.

மத்திய மண்டிலத்திலும், வங்காளத்திலும் வழங்கும் திருந்தா மொழிகளுள் இரண்டிலாவது திராவிடத் தொடர்பு இருக்கின்றது என்பது மேற்கூறிப் போந்தவற்றால் இனிது விளங்கும். எனவே, திராவிடப் பெருங் குழுவினர் கங்கைக் கரையி லில்லாவிட்டாலும், வங்காள மண்டிலம் வரையிலும் பரவி யிருந்தார்கள் என்பது போதருகின்றது. முன்னைப் பழங்காலத்தில் திராவிடக் குழுவினர் இந்தியா முழுதுமே பரவியிருந்திருத்தல் வேண்டும் என்ற கொள்கை ஒருவாறு இதனால் வலியுறுத்தப்படுகின்றது.

கர்னல் டால்டன் தம்முடைய ”வங்காள மக்கள் வரலாறு” என்ற நூலில் திராவிடத் தொடர்பைக் குறித்துக் கூறியுள்ள பகுதி வருமாறு:

"பொதுவாக இப்பொழுது நம்பப்பட்டு வருவதைக் காட்டிலும் மிகப் பெருவாரியாகக் திராவிடத் தொடர்பு வங்காள மக்களிடை காணப்படுகிறது. இன்று இந்துப் பழக்க வழக்கங்களை மேற்கொண்டவர்களாகக் காணப்படும் வங்காளப் பழங்குடிகளிற் பெரும்பகுதியினர் திராவிடக்குழுவைச் சேர்ந்தவர்களே. வங்காளக் கோட்டங்களிலும், சூடிய நாகபுரி, ஒரிஸாப் பகுதிகளிலும் அவற்றை யடுத்த காடுகளிலும் வாழ்ந்துவரும் பூயியர்கள்[1] அனைவரும் திராவிடர்களே; கொச்சர்கள்[2] என்ற இனத்தாரும் திராவிடர்களே. பூயியர்களின் தொகை ஏறக்குறைய 25,00,000; கொச்சர்களின்


  1. Bhuyias
  2. The Kocch