பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

தொகை 15,00,000. இந்த நாற்பது நூறாயிரவரும் வங்காள மண்டில மக்கட்டொகையில் பத்தில் ஒரு பங்கினராவர். இவர்கள் திராவிட இனத்தாருள் சேர்க்கப்பட வேண்டியவர்களே.” இம் முடிபு ஆராயத்தக்க தொன்றாகும்.

கொள்கை வேற்றுமைக் கிடமுள்ள இத்தகைய பகுதிகளை நீக்கி, ஐயத்திற்கே இடமின்றித் திராவிடர் என ஏற்றுக்கொள்ளத்தக்க வகுப்புகளும் அவற்றின் தொகைகளும் 1911-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி கீழே தரப்படுகின்றன.

திராவிட மொழிகள் பேசுபவர் தொகை
1. தமிழ்
1,91,89,740[1]
2. தெலுங்கு
2,35,42,859
3. கன்னடம்
1,05,25,739
4. மலையாளம்
67,92,277
5. துளு
5,31,498
6. குடகு
42,881
7. துடம்
730
8. கோதம்
1,280
9. கோண்டு
15,27,157
10. கந்தம் (கு)
5,30,476
11. இராஜ்மஹால்
64,875
12. ஒராவோன்
8,00,328
மொத்தத் திராவிடர்
6,35,49,846

இக் கணக்கின்படி திராவிடமொழி பேசுவோரின் மொத்தத் தொகை 6 கோடியே 40 நூறாயிரம் ஆதல் காண்க.


  1. கிழக்கிந்தியத் தீவுகள். மோரீஸ் முதலிய தொலை நாடுகளிலுள்ள தமிழ்மக்கள் தொகை சேர்க்கப்படவில்லை. அதையுஞ் சேர்த்தால் தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை 21,000,000 ஆகும்