பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—திரிபுமொழிகள் அல்ல

69

மொத்தமாகக் கணக்கிட்டால் ஆங்கிலத்தில் வரும் இலத்தீனும், தமிழில் வரும் வடமொழியும் ஒரே படித்தாக நூற்றுக்கு 45 விழுக்காடு ஆகிறது. இரண்டிலும் இடப் பெயர்கள், உரிச்சொற்கள், உருபுகள், இடைச்சொற்கள், இலக்கண உறுப்புக்கள் இவை முற்றிலும் தாய்மொழியைச் சேர்ந்தவையேயாகும்.

ஆங்கிலமொழி தன் வளர்ச்சிமுறையில் தூய ஆங்கிலோ சாக்ஸன் மொழியி லிருந்தும், இலத்தீன் மொழியிலிருந்தும் எவ்வகையில் உதவிபெற்றிருக்கிறது என்பதை ஆங்கில சமயத் தலைவர் ட்ரெஞ்ச்[1] பின்வருமாறு விளக்கிக் கூறியுள்ளார்:-

“இம் மொழியி (ஆங்கிலம்)னுடைய இணைப்புகள், ஒலி முறை, நாடி நரம்புகள், தசை நார்கள், இடச்சொற்கள், உருபுகள், இடைச்சொற்கள், எண்ணுப் பெயர்கள், துணை வினைகள், யாப்பு முறைக்குப் பயன்படும் சிறுசிறு அசைச் சொற்கள், இலக்கண முறையமைப்பு ஆகியவை எல்லாம் தனிப்பட்ட ஆங்கிலோ சாக்ஸனே. இத் தெய்விகக் கட்டிடத்திற்கு இலத்தீன் மொழி உதவியவை செங்கற்களும், நன்கு செதுக்கிக் கடைச லிடப்பட்ட சலவைக் கற்களுமே யாம்; ஆனால் இவை யெல்லாவற்றையும் பதித்துப் பிணைத்துக் கட்டிடமாக எழுப்புவிக்க உதவிய நீறு, சுண்ணாம்பு, சாந்து எல்லாம் தூய ஆங்கிலோ சாக்ஸனே’’

இக்கூற்று அப்படியே திராவிடத்திற்கும் வடமொழிக்கும் பொருந்துவதாகும்; மேற் பகுதியில் “ஆங்கிலோ சாக்ஸன்” என்று வருமிடங்களி லெல்லாம், “திராவிடம்” என்பதையும், ”இலத்தீன்” என்று வருமிடங்களிலெல்லாம் ”வடமொழி” என்பதையும் அமைத்துக்கொண்டு படித்தால் திராவிட மொழிக்கும் வடமொழிக்கும் இடையே எத்


  1. Archbishop Trench