பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107


கேட்டாரு. கார்ப்பரேசன் ஆசுபத்திரி மருத்தும் கொணம் காட்டால. என்னைப் பத்து மாசம் சொமந்த புண்ணிய வதிக்குக் கடைசிக் காலத்திலே வைத்தியம் செய்யக்கூட முடியலையே என்கிறத்தை நெனைச்சாக்கக் கிறுக்குப் புடிச் சிடும் போலே இருக்கு. கடைசிலே ஒரு முடிவுக்கு வந்திட் டேன். காலம்பறச் சினிமா ஆட்டம் முடிஞ்சு வந்த ஒரு மைனர்கிட்டேயிருந்து லாந்தினேன் அந்த மணிபர்சை. வேறே வளி இல்லையே ...ம், சல் தியாக் குடு, ஆயி ! நான் ஒடனும் !” கிழவி பானைக்குள் கையை விட்டு எடுத்தாள். மாரியை நெருங்கினள். பத்து ரூபாய்த்தாள் ஒன்றினை நீட்டினுள். * இந்தா, இது எம் பணம். வாங்கிக்கினு நீ ஒடு அந்தப் பணம் அத்தனையையும் விடிஞ்சதும் போலீசு டேஷன்லே குடுத்துப்புடப் போறேன். அந்நிய ஆளு உடமையை எடுத் தஈப் பாவம். நீ போ!' என்று சொல்லி நிறுத்தினுள் கிழவி சொக்கி. கதவு பதமாகத் திறந்தது. சட்டம் நுழைந்து விட்டதா ? சுருட்டை முடியும் rவரம் செய்யப் பெருத முகமும் வாடிய பாவனையும் சாட்சியங்களாக நின்றன ; வறுமைக் கூண்டில் நின்ற அவன் தரையில் சாய்ந்தான். பசி மயக்கம். உண்ட மயக்கம் அல்ல. -- . ஒடி ஒளிந்துகொள்ள முனைந்த மாரி அண்டி வந்து புதிய முகத்தைப் பார்த்தான். பாவம் ஏழைமையை அறிய வேண்டுமானல், இன்னேர் ஏழையால்தான் முடியும் என். கிருர்களே ; மெய்தானே ? இழவி விசுக்கென்று வந்தாள்; முகத்தில் லேசாக திச் தெளித்தாள். மயங்கியவனின் விழிகள் மலர்ந்தன. தாறு மாருகக் கட்டிக் கொண்டிருந்த கிழிசல் வேட்டியைச் சரி செய்தன கைகள். எழுந்தான். தனக்கென்று வைத்திருந்த மிச்சத்தை அவனுக்குக் கொடுத்தாள் அவள். மூக மூசு என்று சாப்பிட்டான். -