பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109


  • நீ என்னை மன்னிச்சிடு, நீ சொன்னது மெய்தான் : புரிஞ்சு போச்சு. இந்தா, பனம் ; இருபத்தஞ்சு ரூபா ! முடிஞ்சுக்க; அத்தக் கெழவி பணத்தையும் வச்சிக்கிடு: ஆபத்துச் சம்பத்துக்கு உதவும். நட , எனக்கு இந்தப் பட் டனக்காை புதுசாக்கும் !’ என்று நீர்மல்க, நெஞ்சுருகச் சொன்னன் மயில்சாமி.

முப்பத்தைந்து ரூபாய்ப் பணத்தில் மாரியின் விழிநீர் சொட்டிக்கொண்டே யிருந்தது. விடிந்தது. மாரியின் தாய் மறுபிறப்பெடுத் துவிட்டாள். ‘ எங்க அம்மா பொனைச்சுக்கிட்டாங்க. இனிமே நான் திருடவே மாட்டேன்.” 爱 崇 举 மயில்சாமியும் மாரியும் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தார்கள் ; எழுந்து கண்களைக் கசக்கிக் கொண்டார்கள். நாஸ்தா கடைக்குக் கூப்பிட்டான் மாரி. கொட்டாவி பறிந்தது. அலுக்கை அதற்குள் போய் விடுமா, பின்னே ? ' ராத்திரி அடிச்சுப் போட்டாப்பிலே நீ தூங்கினியே ; எனக்குத்தான் துரக்கம் புடிக்கல்லே.” ஊரென்று இருத்தால், சேரி இல்லா திருக்குமா? நண் பர்கள் இருவரும் தோழர்களாயினர். மடங்கி மடங்கி வழி நடந்தார்கள். நாஸ்தா கடைக்குள் சென்று மீண்ட போது, உதயசூரியனின் தோற்றம் புலப்பட்டது. - மாரியின் உதடுகளில் தீச்சுடர் புகை கக்கியது. அடுத்த இரண்டாவது நிமிஷத்தில் ஆ !' என்ற ஒசை வெளி வந்தது. கை விலங்கின் ரூபத்தில் சட்டம் சிரித்தது. மயில்சாமி ஓடத் தலைப்பட்டான்.