பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115


ருக்கும். அதுக்கு நான் என்ன செய்யட்டுமாம் ?...எனக்குச் சாமி அளந்தபடி எனக்கு ! ஊம் !...” நிழல் நீண்டது, ஆசையின் விதியைப் போலே ! 救 發 藝 சிடன்பிறைக்கு முகில் துண்டத்திடமிருந்து விடுதலை கிடைத்த ஆனந்தம் தழைத்த வேளை அது. - சாலையின் மடக்கம் வந்ததும், செங்கோடன் 'சடக்' கென்று நின்று விட்டான். காடு மேடு காணுமல், கண் மண் தெரியாமல் கட்டறுத்துப் பாயும் காட்டாற்று வெள்ளமாகச் சுழித் திட்ட ஆசையின் வெறித் துடிப்போடு-தவிப்போடு ஈசான்ய முடுக்கில் பளிச்சிட்ட அந்தக் கட்டடத்தையே வெறித்துப் பார்த்தான். அது கள்ளுக்கடை. & செங்கோடன் தனக்குத் தானே ஒருமுறை சிரித்துக் கொண்டான். உயிரின் துணை தன் பங்குக்கு விடுதலை வாங்கிக் கொண்டு விதி வழியே பிரிந்துவிட்ட துர்ப்பாக்கியத் தின் ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் எலும்பும் தோலுமாக உருகி, உருக்குலேந்து போய்விட்ட அவன் நெஞ்சில் இப் போது புதிய ஆசை, வெறியாகக் கிளர்ந்தெழுந்தது. நெஞ்சைத் தடவிப் பார்க்க வேண்டியவன் சுருக்குப் பைபைத் தடவிப் பார்த்தான். காசுதான் உண்டன. இருக்குதே ! இண்னேக்கு ஒரு வாட்டி மட்டும் ஆசைதீர, மூச்சுமுட்ட கள்ளுத்தண்ணி குடிச்சா என்ன ? குடியா முழுகிப்புடப் போவுது ?,-கால்களை விசிறிப் போட்டான். அடுத்த கணத்திலே : புஸ்...ஊஸ்.ஸ் !' பெட்டிப் பாம்பு சீறுகிறதா? - இல்லே, மனப்பாம்புதான் அப்படிச் சிறுகிறதோ ? அல்லது..?