பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரம்மப் பிரயத்தனமான யிருந்தது. இதற்கிடையில், பெரியசாமி பட்டனத்துப் பக்கம் போய்ச் சாயாக்கடை வைத்து மூன்று வருஷங்களே ஓடவிட்டு ஊருக்கு ஓடிவந்தி போது, அவனிடம் பணப் புழக்கம் மிஞ்சி யிருந்தது ; கல்யாணம் கட்டிக் கொண்டான். இரண்டு சோளக் கொல்லேயில் தனக்கு ஒன்றை எடுத்துக் கொண்ட பெரிய சாமி, தம்பிக்கு ஒன்றையும் ஈந்தான். ஆளுல், பெரியசாமி யின் பால் அதிருஷ்ட தேவதையின் நோக்கு விழுந்திருந்தது. எனவே, அவன் தொட்டது துலங்கியது. ஆனல், தம்பியான சிவசாமி உடல் உழைப்பையே நம்பினன் ; உழைப்பு முழுப் பலன் சொல்லி விடுமென்று கூறுவது சாத்திய மில்லைதானே ! காலம் நிற்கவில்லை. பூங்காவனத்தின் மீது சிவசாமிக்கு இஷ்டம் விழுந்தது ; கல்யாண விஷயத்தைச் சொன்னன் அவன் ; தன் தமைய னிடம் பிரமாதமாக எதிர்பார்த்தான் அவன். ஆனால் அவ னே நூறு ரூபாய் மட்டுமே கொடுத்தான். ' எங்கிட்டே இதுக்கு மேலே கிடையாது. நான் சுயார்ஜிதமாகச் சம்பா திச்சுக் கை கொஞ்சம் வலுத்தப் புறந்தான் கண்ணுலம் காட்சியைப் பத்தியே மனசிலே நினேச்சேன். அது போலே, நீயும் சொந்த மாச் சம்பாரிச்சு ஆனதும், உன் மனசுக்கு ஏத்தவர்ேத் கட்டிக்கிடேன் 1’ என்று நிர்த்தாட்சண்யமாகத் தீர்ப்பளித்துவிட்டான் பெரியசாமி. அன்று தினம் உடன்பிறப்புப் பிளவு கண்டது ; முகா லோபனம் நின்றது. பெரியசாமியின் கை ஓங்கியது ; வெள்ளாமை விளைச் சல் மீட்டுமல்ல், கொடுக்கல் வாங்கல் தொழிலும் நடத்தி ன்ை. மிளகாய் உபயத் 'துக்கு ஐந்து பத்து கடன் கொடுத் தும் வரலான்ை அவன், தலைச்சன் குழந்தை வேலாயுதம். அவன் பிறந்ததும், அதிருஷ்டம் மேலும் வளர்ந்தது. சிவசாமி தனிமரம் ஆனன். மேலத் தெருவில் இருந்த பூங்காவனத்தின் பூங்கரம் பிடித்தான்; அந்தக் குடிசை யிலேயே வாழ்க்கை நடத்தின்ை. கையடக்கமாக டி. கடை"