பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41


" ஆமா, இங்கிட்டு வந்து வெகு தொலைக்குச் சொத்து சேர்த்து வச்சாராமே ? அது சங்கதி ஒமக்குத் தீரத் தெரிய ணுமே?’ என்ருர் தேவர்-சன்னசித் தேவர். " அந்தச் சங்கதியை அந்தக் கிழவரைக் கேட்டால்தான் தெரியுமுங்க ' குரல் நெகிழ்ந்து ஒலித்தது. அதெல்லாம் சொல்லித் தெரியிற தாக்கலா? என்ன இருந்தாலும் முத்துமலை அம்பலம் யோகக்காரப்புள்ளிதான்!” "ஆமா ஆமா, விரிச்சுப்படுக்கறத்துக்கு நிழல் குடும்பத் தாரில்லே ' ' வெட்டிப் பேச்சு ஏதுக்கு? ...பொனத்தைத் துரக்கற துக்கு வழி பண்ணுங்க. ஆளுங்க நாலு பேரைப் பிடிங்க. அம்பலம் ' என்ருர் மணி. " அல்லாரும் சத்தே பொறுத்துக்கிடுங்க. உண்மையிங்க றது தெய்வத்துக்குச் சமட்டி. நாமள்ளாம் காளிக்கு அடிமைப்பட்டவங்க. இதை நானும் மறந்திடலே ; நீங்களும் மறந்திடாதீங்க. அந்த சன்னுசித் தேவர் ஒரு தாக்கலைத் தூக்கிப் போட்டாரு. ஊர் முழுவதும் அப்படிக் கூட நினைச் சிருக்கும். இத்தாப் பாருங்க. இந்தச் சுருக்குப் பை. இது தான் ராவு அந்தக் கிழவர் கடோசியாக் குடுத்து வச்சுது. பத்தணுவுக்கு மூன்று காசு கொறைச்சல். அம்புட்டுத்தான் பணம். உள்ளாற கூடையிலே இருக்கிற காய்கறிங்க மிச்சம். மத்தபடி...மத்தப்படி அவரோட காசு எங்கிட்டே இன்னிய தேதி வரைக்கும் ஒரு தம்பிடி சேர்ந்ததில்லை. அவரு கணக்கு வழக்கெல்லாம் இந்த நோட்டிலேதான்....அதை வேணும்னு லும் பார்த்துடுங்க' என்று ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் போட்டார் அம்பலம். அப்போது அந்தக் கணக்கு நோட்டிலிருந்து மக்கிப் போன்தொரு பழைய செய்தித்தாள் சிதறி விழுந்தது. 6