பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


திரை ஓவியமாக அந்த ஏழையின் நெஞ்சரங்கில் ஒடிக் கொண்டேயிருந்தது. ஒரு வருஷத்துக்கு முன். ஒரு நாள் : மினர்வாவுக்குச் சவாரி ஏற்றி வந்தான் மணிமுத்தன் கால் சூடு கபாலத்தில் தாக்கியது. ஆதித்த பகவானின். கிரணங்கள். அதுவே அவனுடைய இருள் எனும் கிரணத் தைப் போக்கடிக்கும் கிரணமென்பதை அவன் எப்படி அறிய முடியும் ? பசி வயிற்றைக் கிள்ளவே, சாயாக் கடைக்குள் அடி எடுத்து வைக்கப்போன்ை. அத்தருணத்தில், அருகிலே சோற்றுக்காரி ஒருத்தி அம்பிகையாய்த் தோன்றிள்ை. படி யளக்கும் பாவையாகக் காட்சி அளித்தாள். வியர்வையைத் தெருக் குழாயடியில் வழித்துப் போட்டுவிட்டு நடந்தான். ரிக்ஷாவை ஓரமாக நிறுத்தினன். சோறு கேட்டான். கேட்டுக்கொண்டே, பணம் எடுக்க முனைந்தான். ஏமாற்றம் விடுகதை போட்டது. அவனது சின்னஞ்சிறு நாலணு பிளாஸ் டிக் பெட்டகத்தைக் காணவில்லை. என்ன அஜாக்கிரதை ! எங்கே விழுந்தது ? " இன்ன ரோசிக்கிறே? துட்டு இல்லீயா?......ம் சரி, துன்னு !...” என்று சாப்பாட்டுப் பட்டையை நீட்டி "வெஞ்சனமும் வைத்தாள் அந்தப் பெண். மணிமுத்தனுக்கு அவளுடைய அந்த அன்புச் செயலில், பசியெல்லாம்'கடலே கதி’யென்று ஓடிவிட்டது. அவளுடைய ஆணேப்படி அவன் உண்டான். . - சோறு, சொர்க்கத்தைக் காட்டாதா? மணிமுத்தனுக்கு முத்தாயி வாழ்க்கைப்பட்டாள்! சாமி, ஏறங்குங்க!” ஒன்ருன் மணிமுத்தன். ரிக்ஷாவினின்றும் இறங்கிய ஸ்லாக் சட்டை இளைஞர் சுற்று முற்றும் பார்வையைத் திரைவிரித்தார். இருள் திரை விலக்கப்பட்டிருந்தது. "இந்த நடைபாதைக் குடிசைக்கு முன்னலே என்ன நிறுத்தி விட்டிருக்கிருனே ? ஏன்?’