பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52


பசிக்கும் நேரம் காலம் உண்டு அல்லவா ? முத்தையாச் சேர்வை முன் நெற்றியில் அழும்பு பண் னிக் கொண்டிருந்த முடி இழைகளேக் கோதி வி ட் டு க் கொண்டார். கறுப்பும் வெள்ளையும் வர்ண பேதம் காட்டின. திருநீற்றுப் பட்டைகள் வேர்வையில் கரைந்திருக்கவேண்டும் ஏக்கத்தில் கரைந்து உருகும் அவரது உள்ளத்தைப் போலவோ ? கல்லாவை இழுத்தார் ; மகிழ்ச்சி தளும்பியது. நெஞ்சில் நின்ற மகமாயி நினைவிலும் நின்ருள். அதோ, ஆடிவரும் தேராக ; குழந்தை ஒன்று தத்தித் தத்தி நடைபயின்றது. பக்கத்துப் பெட்டிக்கடைக்காரரின் மழலை அது. - அந்தக் குழந்தையையே தொடுத்த விழி எடுக்காமல், பதித்த நெஞ்சம் விலக்காமல் பார்த்தார் சேர்வை. நெஞ்சில் கொப்புளித்த ஏக்கம், இனம் கண்டுணராத பாசத்தின் கலங்கலோடு, கலக்கத்தோடு கண்களை எட்டிப் பார்த்தது. கடுமைமிக்க மீசைக்கு அடியின் கனிவு பூக்க, "ஏ, பாப்பா !” என்று விளித்தார். சுவாமிக்குப் படைத்த பூவன்பழம் கையில் இருந்தது. சித்தம் போக்கு சிவன் போக்கு என்பார்கள். குழந்தையும் அப்படித்தானே ? அது தன்பாட்டில் தன் அப்பாவைத் தேடிச் சென்றது. ஏமாற்றம் பிடரி பற்றியது. ஏக்கம் உந்தியில் கழித்தது. மகமாயி! எங்களு பலிக்காதாங்காட்டி : சேர்வைக்கு இருக்கை கொள்ளவில்லை. நாற்காலித் திண்டு முள்ளா யிற்று. ஊர் நாட்டைப்போலே எங்களுக்கும் ஒரு குஞ்சைக் காட்டினுள், ஆத்தாளுக்குக் குறைஞ்சாபோயிடும்?...எங்க் பொசிப்பு அம்புட்டுத்தானே? பாவம் வள்ளிப் பொண்ணு'

  • முத்தையா !”