பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65


மித்திருக்கையில் சினிமா வானில் பிரத்தியேக ஸ்தானத்தை அவள் ஸ்வீகரித்துக் கொண்டதில் வியப்பில்லேதான். ஆணுல் மிஸ் மாயா ஒரு காலத்தில்-அதாவது இரண்டு வருஷங் களுக்கு முன்-சர்வ சாதாரணமான வெறும் கோகிலமாகவே இருந்து வந்தாள். இளமை தொட்டே சினிமா என்ருல் அவ ளுக்குப் பிரானன். புதிது புதிதாக ரிலீஸ் செய்யப்படும் படங்களின் தராதரத்தை எடை போட்டுச் சீர் தூக்கும் க்ரிடிக்’க்கின் பண்பாடு அவளிடம் அப்போதிருந்தே அடைக்கலம் புகுந்திருந்தது. இத்தகைய நிலையில் எப்படி யும் சினிமாவில் சேர்ந்துவிடவேண்டுமென்ற ஆதுரம் மட்டும் அவள் இதய அந்தரங்கத்தில் ஏதோ ஒரு மூலையில் தூங்கிக் கிடந்தது. . அதே சமயம், படத்தில் நடிக்கப் புது முகங்கள் தேவை? என்ற விளம்பரம் அவள் பெண் நெஞ்சத்தில் பால் வார்த் தது. பலதரப்பட்ட' போஸ் களில் புகைப் படத்தை அனுப் பினள். எதிர்காலத்தின் புகழுக்கு முகமன் கூறி வெற்றி யுடன் பதில் வந்தது. கிளம்பினள். திரையுலகம் ஊக்க மூட்டி வரவேற்றது. கோகிலம், மிஸ் மாயாவாக மாறினுள் -அதாவது, மாற்றப்பட்டாள் ! ஆண்டவனது சிருஷ்டி மேடைக்கு மாயா ஒர் உன்னத எடுத்துக் காட்டு. அவளுடைய அழகின் தேஜஸ், அருவியின் மெல்லிய ஓசைபோல் சிரிக்கும் பாணி, தன் பாகத்தை உணர்ந்து செவ்வனே நடிக்கும் லட்சியம்-இவை அவள் மேதைக்கு முத்திரையிட்டன. அதன் காரணமாக டைரக் டரது அன்பிற்குப் பாத்திரமானள். டைரக்டர் சந்திர மெளலி இளம் வயசு, எம். ஏ. பட்டதாரி. சிறந்த கலா ரசிகர். மாயாவைத் தான் எடுக்கும் முதல் படத்திலேயே எப்பாடு பட்டும் பிலிம் ஸ்டாராக்கி விடுவதென்றும் திட்ட மிட்டிருந்தார்.

  • அன்னை பூமி’ என்ற படம்தான் அவருடைய முதல் சிருஷ்டி, தான்ே வில்லன் பாகமேற்று நடித்தார். பொது மக்களின் உள்ளத்தை எளிதில் கவரத்தக்க முறையில் காமிக்

9