பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

61


இவர்கள் தான் குழுவின் மூளை எனக் கருதப் படுபவர்கள். முன்னாட்டக்காரர்கள் எல்லாம் ஒன்று கூடி, முனைந்து திட்டமிட்டு, பகைவர் காத்திருக்கும் கோட்டைக் காவலைத் தகர்த்துத் தளர்த்தி வெற்றி பெறுகின்ற வித்தையைக் கற்றவர்கள், விவேகத்தைப் பெற்றவர்கள் ஆவார்கள்.

தனியாகவோ அல்லது துணையுடனோ சேர்ந்து சென்று, மின்னல் வேகத்தில் இலக்குவைத் தாக்கும் தன்மை இவர்களுக்கு அவசியம் வேண்டும்.

வெளிப்புற ஆட்டக்காரர் உதைத்தாடுகிற பந்தானது மேலாக (Air) வருகின்ற பொழுது, தலையாலிடித்து அனுப்பும் பொறுப்பு இவருக்கு உண்டு.

இ) வெளிப்புற முன்னாட்டக்காரர்கள் (Left out-Right out)

இவர்களுக்கும் முன்னர் கூறிய தகுதிகள் அனைத்தும் பொருந்தும். இடைக்காப்பாளர்களும், இவர்களுமே ஆட்டத்தின் முறையை, ஒழுங்கை அமைப்பவர்களாகும்.

மைய ஆட்டக்காரருக்கும் உட்புற ஆட்டக்காரர்களுக்கும் சமயம் நேர்கிற பொழுது, பந்தை வழங்கவும், அவர்களிடமிருந்து பந்தைப் பெற்று, இலக்கை நோக்கி அடிப்பதும் இவர்கள் பணியாகும்.

இலக்குவை முற்றுகையிடுகின்ற பொழுது, முழு மூச்சாகப் பணிபுரிகின்ற சந்தர்ப்பங்களில், சாகச வேலைகளாற்றும் சரியான ஆட்டக்காரர்களாக இவர்கள் தங்கள் குழுவிற்கு உதவுவார்கள்.