பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

கால் பந்தாட்டம்


ஆடலாம். இதுபோன்ற தாக்கும் முறைகளை அனுபவசாலிகள் பலவகைகளாகப் பிரித்துக் காட்டுவர்.

முன்னாட்டக்காரர்களில் மைய ஆட்டக்காரராக இருப்பவர், தனது வலப்புறம் அல்லது இடப்புறம் ஆடுகின்ற வெளிப்புற அல்லது உட்புற முன்னாட்டக் காரர்களுக்குப் பந்தை வழங்கி ஆடுகளத்தின் ஒரத்திற்குச் செல்ல வைத்து, அங்கிருந்து அவர் இலக்கை நோக்கிப் பந்தை உதைக்க ஆடுவது ஒரு முறை.

மேற்கூறிய முறையிலே பந்தினை ஆடி, பந்து இலக்கை நோக்கி வரும்பொழுது மைய முன்னாட்டக்காரரும் மற்றவர்களும் தலையால் மோதியோ, அல்லது கால்களால் தேக்கியோ பந்தை இலக்கினுள் அடிப்பது இன்னொரு முறை.

முன் கூறியவாறு ஆடுவதற்கு, முன்னாட்டக்காரர்களுக்குள்ளே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஆடும் முறையை முன்கூட்டியே விளக்கிப் பேசி விளையாடினால், ஆட்டமும் கட்டுக்கோப்புடனும் கட்டுப்பாடுடனும் இருக்கும்.

அத்துடன், மைய இடைக்காப்பாளர், மைய முன்னாட்டக்காரர் மற்றும் உட்புற வெளிப்புற முன்னாட்டக்காரர்கள் அனைவரும் எதிர்க்குழு இலக்குப் பகுதிக்குச் சென்று, பந்துடன் விளையாடி இலக்கைத் தாக்கும்பொழுது எதிர்க்குழு நிச்சயம் தடுமாறவே செய்யும். இந்த சூழ்நிலையைத் தாக்குவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்னும் உட்புற வெளிப்புற (Right in or Right out. Left or Left out) ஆட்டக்காரர்கள் தங்களுக்குள்ளேயே