98 கால ஆராய்ச்சி இறுதிக் காலத்தில் இங்ங்னம் ஒரு சோழன் பேரரசனாக இருந்தான் என்று கூறத்தக்க சான்றுகள் இல்லை; (4) இவன் சிவன் கோவில்கள் பல கட்டினவன். இந்நான்கு காரணங்களையும் நடுவுநிலையினின்று ஆராயின், கோச்செங்கணான் சங்க காலத்திற்குப் பிற்பட்ட வனாக இருத்தல்கூடும் என்ற எண்ணமே பலப்படும். 4. கோச்செங்கணான் தில்லையில் சமயத் தொண்டு செய்தவன் என்பது சேக்கிழார் கூற்று. தில்லை, ஒரு சிவத்தலமாகச் சங்கச் செய்யுட்களிற் கூறப்படாமை நோக்கத் தக்கது. அது கோச்செங்கணான் காலத்திற் சிறப்புப் பெற்றது. அவன் அங் மறையவரைக் குடியேற்றி மாளிகைகள் பல சமைத்தான். இங்ங்னம் தில்லை சிவத்தலமாகச் சிறப்புற்றமை சங்ககாலத்திற்குப் பிறகே என்பது தவறாகாது. - 5. கோச்செங்கணானுடைய தந்தை பெயர் சுபதேவன்; தாயின் பெயர் கமலவதி என்பன என்று சேக்கிழார் கூறியுள்ளார்." இப்பெயர்களைச் சோழப் பேரரசின் முதல் அமைச்சரான சேக்கிழார் தக்க சான்றுகொண்டே கூறினாராதல் வேண்டும். இப்பெயர்கள் தூய வட மொழிப் பெயர்கள். இங்ங்ணம் சங்க காலத்து அரச குடும்பத்தினர் வடமொழிப் பெயர்களை வைத்துக் கொண்டனர் என்பதற்குப் போதிய சான்றில்லை. சம்பந்தர் காலத்திற்கு முற்பட்ட சுமார் 6 அல்லது 5 ஆம் நூற்றாண்டினர் என்று கருதத்தக்க காரைக்கால் அம்மையார்க்குப் புனிதவதி என்பது பெயர். அப்பெயருடன் மேற்சொன்ன கமலவதி என்ற பெயர் ஒப்புநோக்கத்தக்கது. இத்தகைய பல காரணங்களால் கோச்செங்கணான் சங்க காலத்தவன் ஆகான் எனக் கொள்ளலாம். ஆயின், அவன் அப்பர்,சம்பந்தராற் பாடப்பட்டவன். ஆதலின், அவன் காலம் மேற்சொன்ன சங்ககாலத்திற்குப் பிறகும், அப்பர் சம்பந்தர் காலத்திற்கு முன்னும் ஆதல் வேண்டும். அஃதாவது, அவன் காலம் ஏறத்தாழக் கி.பி. 400-600க்கு உட்பட்டது எனக் கூறலாம். இப்பரந்துபட்ட காலத்துள் அவன் வாழ்ந்திருக்கத்தக்க பொருத்தமான காலம் யாதெனக் காண்போம். கோச்செங்கணான் காலம் வேள்விக்குடிப் பட்டயப்படி சங்ககாலத்திற்குப் பிறகு பாண்டியநாடு களப்பிரர் ஆட்சியில் இருந்தது; அக்களப்பிரர் கையிலிருந்தே கடுங்கோன் தன் நாட்டைக் கைப்பற்றினான் என்பது தெரிகிறது; ஆயின், சோழ நாடு எவ்வளவு காலம் களப்பிரர் கையில் இருந்தது? கி.பி. 5ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் புத்த தத்தர் குறித்த அச்சுதனுக்குப் பிறகு சோழ நாட்டை ஆண்ட களப்பிரர்
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/105
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை