பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றின் காலம் 3 புலனாகிறது. இதனால் தமிழகத்தில் வேத ஒழுக்கம் சிறிது சிறிதாகப் பரவத்தொடங்கியது என்பது தெளிவாகிறது. ஆகவே, சமயத் தொடர்பான வடசொற்கள் தமிழில் நுழையலாயின என்பது வெளிப்படை. கி. பி. 4ஆம் நூற்றாண்டில் தமிழகத்துக்கே புதிய வரும் பிராகிருத-வடமொழி வல்லுநருமாகிய பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றித் தொண்டைநாட்டை ஆளலாயினர் என்பது ஆராய்ச்சியாற்போந்த உண்மையாகும்." பல்லவரால் தெற்கு நோக்கி உந்தப்பட்ட களப்பிரர் முறையே தொண்டை, சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆளலாயினர். அவர்கள் கி. பி. 575 வரை சோழ, பாண்டிய நாடுகளை ஆண்டனர். பின்னர் முறையே பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் அடங்கிய குறுநில மன்னராயினர் என்பனவும் வரலாறு கண்ட உண்மைகளாகும். ஏறத்தாழக் கி.பி. 575 முதல் பாண்டிய நாடு பாண்டியராலும், கிருஷ்ணையாறு முதல் காவிரியாறு வரையிலுள்ள பெருநாடு சிம்மவிஷ்ணு முதலிய பல்லவராலும் ஆளப்பட்டு வந்ததும் ஆராய்ச்சியாற்போந்த செய்தியாகும். தமிழகத்திற் பன்னெடுங் காலமாக இருந்து ஆண்டு வந்த சோழ, பாண்டியர் இங்ங்னம் தம் நாட்டைக் களப்பிரர்க்கும் பல்லவர்க்கும் விடவேண்டிய துன்பநிலை உண்டான காலம் கி.பி. 4, 5-ஆம் நூற்றாண்டுகள் ஆகும். ஏறத்தாழக் கி. பி. 300 முதல் கி. பி. 550 வரை பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் இருந்ததென்னலாம். புறநானூற்றிற் காணப்படும் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் செயலே களப்பிரர் ஆக்ரமிப்புக்கு முற்பட்ட செயலாகச் சின்னமனூர்ச் செப்பேடு செப்புகிறது. தலையாலங் கானத்தில் தன்னொக்கும் இருவேந்தரைக் கொலைவாளில் தலைதுமித்துக் குறைத்தலையின் கூத்தொழித்தும் மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் மகாராசரும் சார்வபெளமரும் மகிமண்டலம் காத்திகந்தபின் ... ஆயின், வேள்விக்குடிச் செப்பேடு, "பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதி 'வேள்விக்குடி என்னும் ஊரைக் கொற்கைகிழான் நற்கொற்றன் என்பாற்கு நீரோடு அட்டுத் தந்தான். நற்கொற்றன் அதை நீடு புக்குத்துய்த்தபின் அளவரிய அதிராசரை அகல நீக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/11&oldid=793119" இலிருந்து மீள்விக்கப்பட்டது