பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றின் காலம் 5 என்று புறப்பாடல் ஒன்றில் (செ2) பாராட்டப்பட்டுள்ளான் உதியஞ்சேரலாதன் என்னும் சேரமன்னன். இச்சேரர் பெருந்தகை பாரத காலத்தவன் என்று பொருள்படும்படி இப்பாடலுக்கு உரைகண்ட பழைய புலவர் எழுதியுள்ளார். தம் செய்யுட்களில் வரலாற்றுச் செய்திகளைப் புகுத்திப்பாடும் இயல்புடைய மாமூலனார் என்ற சங்ககாலப் புலவர், துறக்க மெய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ் சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை இரும்பல் கூளிச் சுற்றங் குழிஇயிருந் தாங்கு, என்று உதியன் சேரலாதன் பெருஞ்சோறு கொடுத்த திறத்தை அகநானூற்றுச் செய்யுள் ஒன்றில் (233) பாராட்டியுள்ளார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரத்தைச் செய்த இளங்கோ அடிகள், ஓரைவர் ஈரைம் பதின்மர் உடன்றெழுந்த போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக் கார்செய் குழலாட ஆடாமோ ஊசல் கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ ஊசல், என்று (காதை 29, செ. 24) புறநானூற்றில் கூறப் பெற்ற நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இளங்கோவடிகள் தமக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து செயற்கரும் செயலைச் செய்த தமது முன்னோனை உளமாரப் பாராட்டியுள்ளார் எனின், பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் உதியன் சேரலாதன் செய்த செயற்கரும் செயல் (பெருஞ்சோறு வழங்கியமை) சேர மரபினராலும் சேரநாட்டுக் குடிமக்களாலும் வழி வழியாகப் போற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்று கருதுதல் பொருத்தமாகும். பாரத நிகழ்ச்சிகள் நடைபெற்ற காலம் ஏறத்தாழக் கி.மு. 1400-800 என்பர் பேராசிரியர் ஆர். சி. تلا" வேறு சில வரலாற்று ஆசிரியர் ஏறத்தாழக் கி. மு. 1000 என்பர். எனவே, பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் காலமும் ஏறத்தாழக் கி.மு. 1000 என்று கூறலாம். அவனை மேலே கண்டவாறு பாராட்டிப் பாடிய முரஞ்சியூர் முடிநாகராய' முதற் சங்கப் புலவர் என்று களவியலுரை கூறுகின்றது. இடைச் சங்கத்தின் இறுதிக்காலம் தொல்காப்பியர் காலம் (கி.மு. 4ஆம் நூற்றாண்டு) ஆகும். எனவே, தலைச்சங்கப் புலவராகிய முடிநாகராயர் காலம் ஏறத்தாழக் கி. மு. 1000 என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/13&oldid=793162" இலிருந்து மீள்விக்கப்பட்டது