அறிஞர்கள் பார்வையில் மா.ரா. வித்துவான் மா. இராசமாணிக்கம் அவர்கள் எது பேசினாலும் எது எழுதினாலும் அது ம் ஆணித்தரமாகவும் அசைக்க முடியாததாகவும் இருக்கும் என்பது வெளிப்படை. தமிழர் திருமண மாநாட்டை நடத்தப் பெரும் பங்கெடுத்துக் கொண்டு, தன்னலம் கருதாது இராப்பகலாய் உழைத்துவரும் திருவாளர் வித்துவான் மா. இராசமாணிக்கம் அவர்களை வாழ்த்துகிறோம். திருவிளக்கு - திங்கள் இதழ்- சென்னை (1939) மா. இராசமாணிக்கம் எழுதிய நூல்கள் அனைத்தும் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபடும் சென்னையிலுள்ள முன்னணித் தமிழ் நூலாசிரியர்களுள் அவருக்கு ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்துள்ளன. ஈராஸ் பாதிரியார் (1947) டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்களைப் பல ஆண்டுகளாக நான் அறிவேன். அவர் பழுத்த சைவர்; ஆனால், சமய ஊழல்களைக் கண்டிக்கும் மன உறுதி உடையவர். சைவ சமயக் கூட்டங்களிலேயே சமய ஊழல்களைக் கண்டிக்கும் மன உரம் படைத்தவர். குன்றக்குடி அடிகளார் (1956)
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/176
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை