பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம் 19 'நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர்' என்னும் வரியில் 'நான்கு - நால்கு' என்று திரிந்துள்ள மைக்குத் தொல்காப்பியத்துள் விதி கூறப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. (6) தொல்காப்பியர் ஒன்று முதல் பத்து, நூறு, ஆயிரம், நூறாயிரம் வரையில் உள்ள எண்களுக்குப் புணர்ச்சி விதி கூறியுள்ளார். 17 நூறு நூறாயிரமாகிய கோடி என்னும் எண்ணினைப் பற்றி அவர் யாண்டும் கூறவில்லை. இதனால் அவர் காலத்தில் கோடி என்னும் எண் வழக்கில் இல்லை என்பது தெரிகிறதன்றே? ஆயின், கோடி என்னும் எண் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை யிரீஇய பெருமைத் தாகநின் ஆயுள் தானே." திருக்குறளில், கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது." என வந்துள்ளமை காண்க. (7) கள் என்னும் பன்மை விகுதி அஃறிணையில் வரும் என்பது தொல்காப்பிய விதி. - கள்ளொடு சிவனும் அவ்வியற் பெயரே கொள்வழி உடைய பலவறி சொற்கே" இவ்விதிக்கு மாறாகத் திருக்குறளில், மற்றையவர்கள், "பூரியர்கள் என உயர்திணைப் பன்மையில், கள் வந்துள்ளது." கலித்தொகையில், 'ஐயர்கள் எனக் 'கள்' விகுதி உயர்திணையில் வந்துள்ளது. (8) 'அன்' விகுதி ஆண்பால் படர்க்கைக்கே உரியது என்பது தொல்காப்பிய விதி. அன்ஆன் அள்ஆள் என்னும் நான்கும் ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே." இவ்விதிக்கு மாறாகப் புறநானூற்றில், உறைத்தனன் யானாக", "அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே' என அன் விகுதி தன்மை ஒருமையில் இடம் பெற்றுள்ளது: அகநானூற்றில் “நினக்கியான் இளைஞன் அல்லனே', 'யான் வாழலனே', "மிகுதி o கண்டன்றோ இலனே, நனி அறிந்தன்றே இலனே' என வழங்கப் பெற்றுள்ளது; நற்றிணையில் கூறுவன் வாழி தோழி. う "உள்ளினன் அல்லனே யானே"," 3 ΤGδΤ வந்துள்ளது; குறுந்தொகையில், அளியன் யானே", "நீயலன் யான் என",

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/27&oldid=793292" இலிருந்து மீள்விக்கப்பட்டது