பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம் 31 50. $1. 52. 58. M. Srinivasa Ayyangar, Tamil Studies, P. 8. T.R. Sesha Ayyangar, Ancient Dravidians, p. 109. “The famous Tamil grammatical work, the Tolkappiyam, may be assigned to the period (B.C 325 - B.C 188) under survey, it is said to exhibit the influence of Aindra Vyakarma, a pre_panini system system of Sanskrit grammar, but it is free from Buddhist influence.” R. Sathyanatha Ayyar, History of India Vol. I, pp. 170, 171. தொல்காப்பியச் சூத்திரங்கள் சில பாணினிய சூத்திரங்களை ஒத்துள்ளன என்றும், சில பரத முனிவருடைய நாட்டிய சாத்திரச் சூத்திரங்களை ஒத்துள்ளன என்றும் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் தமது இலக்கிய வரலாற்றில் (பக். 58 ) கூறியுள்ளனர். வித்துவான் க. வெள்ளைவாரணார் தாம் இயற்றிய "தொல்காப்பியம்" என்னும் அரிய ஆராய்ச்சி நூலில் (பக் 106 - 127) பிள்ளையவர்களின் கூற்றுக்களுக்கு மறுப்பு வழங்கியுள்ளார். இரண்டையும் படித்துன்னர்வது நல்லது. . History of Ceylon, vol I, Part 1, p. 208. ரா. இராகவையங்கார், தமிழ் வரலாறு, பக் 37 - 38 Sir James Emerson Tnnent, Ceylon, vol I, p. - 7, foot note. காதை 11, வரி 19 - 20: காதை 8, வரி 1, அடியார்க்கு நல்லார் விளக்கவுரை. வடமொழியில் வேதங்களையும் பிரமாணங்களையும் எழுதிய ஆரியர் ஏறத்தாழக் கி.மு. 2300 அல்லது கி.மு 2000 - இல் இந்தியாவிற் புகுந்தனர் gTaiti gi offmüläfflurrorff 5(5%g. (N. K. Dutt, Aryanisation of India, pp. 39 – 58) ஆரியர் ஏறத்தாழக் கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்திருக்கலாம் என்று பேராசிரியர் வி. அரங்காச்சாரியார் கூறியுள்ளார் (இது முன்பே கூறப்பட்டுள்ளது). எனவே, 0. பி. 7 - ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழில் வட சொற்கள் கலக்கத் தொடங்கியிருத்தல் வேண்டும் என்று நினைப்பது பொருத்தமாகும். இங்ங்ணம் காலப்போக்கில் நீக்கமுடியாத அளவு வட சொற்கள் தமிழிற் கலந்தமையாற்றான் தொல்காப்பியர் வட சொற்கள் தமிழிற் கலைத்தலைப் பற்றி இரண்டு சூத்திரங்கள் கூறினார்; பிராமணர் தொழில்களையும் கூறினார். எனவே, தொல்காப்பியர் ஆரியர் தமிழகம் வந்து தங்கிச் சில நூற்றாண்டுகளேனும் கழிந்த பின்னரே தோன்றியவராதல் வேண்டும் என்பது தெளிவாதல் காண்க. இந்த வரலாற்று உண்மையை நினைவிற்கொள்ளின் தொல்காப்பியர் காலம் கி.மு. 2000 அல்லது கி.மு. 3000 என்று கூற இடந்தராது. தொல்காப்பியர் சமணர் என்றுரைப்போர் வாதத்தையும் அதற்குரிய மறுப்பையும் வித்துவான் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள "தொல்காப்பியம்" என்னும் ஆராய்ச்சி நூல் (பக். 159 - 172 நோக்கி உணர்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/39&oldid=793320" இலிருந்து மீள்விக்கப்பட்டது