பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கால ஆராய்ச்சி திருச் க்கு மூல நூல்கள் 'திருக்குறள் இன்றுள்ள சங்கப் பாக்கட்கு முற்பட்டதாயின், அதற்குரிய மூல நூல்கள் யாவை? என்னும் கேள்வி அடுத்து எழுவதாகும். - தொல்காப்பியர் காலம் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு என்பதும், தொல்காப்பியத்திற்கு முன்னரும் சம காலத்திலும் இன்றுள்ள சங்கப் பாக்களுக்கும் முன்னரே இலக்கண ஆசிரியர் பலர் இருந்தனர் என்பதும், இலக்கிய நூல்கள் பல இருந்தன என்பதும் சென்ற பகுதியிற் கூறப்பட்டன. "இவற்றால் தொல்காப்பியனார் தம் இலக்கணத்திற்குக் கருதிய இலக்கியங்கள் எத்துணையோ பல, அவர்க்கு முன்பே இந்தத் தமிழ்நாட்டுள் வழங்கின என்றே ஒருதலையாகத் துணியலாம்." எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுதல்போல இலக்கியத்திலிருந்து எடுக்கப்படுவது இலக்கணம். ஆதலால், தொல்காப்பியத்திற்கு முற்பட்ட இலக்கண நூல்களுக்குக் கருவூலங்களாகப் பல இலக்கிய நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றமன்றோ? அவை பரந்துபட்ட காலத்தனவாதல் வேண்டும். அவற்றுள் சிலவே இறையனார் களவியலுரை முதலியவற்றில் பெயரளவில் காட்டப்படும் நூல்கள். அப்பழைய இலக்கிய நூல்களே அறம், பொருள், இன்பம் பற்றிய பல குறிப்புகளைத் திருக்குறளுக்கு உதவி இருக்கலாம். மிகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்து தமிழகத்தை ஆண்டு வந்த சேர, சோழ, பாண்டியருடைய ஆட்சி முறைகளைக் கொண்டும், சான்றோர் வரைந்த மேற்சொன்ன பண்டை இலக்கியங்களைக் கொண்டும் உலகத்தார் அனைவரும் மனவந்து ஏற்றுக் கொள்ளும் முறையில் திருவள்ளுவர் தம் அறநூலைச் செய்து முடித்தனர் எனக் கொள்ளுதலே இதுகாறும் கண்ட உண்மைகளை நோக்கப் பொருத்தமாகக் காணப்படுதிறது. முடிவுரை இதுகாறும் பேசப்பட்ட உண்மைகளால், 1. தொல்காப்பியத்துக்குப் பின்பு எழுந்த நூல் திருக்குறள் என்பதும், 2. தொல்காப்பியர் காலம் ஏறத்தாழக் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு என அறிஞர் கருதுவதால் திருக்குறள் கி.மு. 4ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என்பதும் 3. கி.பி. முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்தனவாகச் சிலரால் கருதப்படும் பெரும்பாலான தொகை நூற்பாக்களிலும் சிலப்பதிகாரம் மணிமேகலை எனப்படும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/53&oldid=793352" இலிருந்து மீள்விக்கப்பட்டது