பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்துப்பாட்டின் காலம் 55 வேண்டினான். சிவன் அவ்வேண்டுகோளுக்கு இசைந்து, தனது வீரியத்தை வெளிப்படுத்தி, அதைச் சேதப்படுத்தி, ஒரு கூறு மட்டும் இந்திரனிடம் கொடுத்தான். அது தேவசேனாபதியாகும் தகுதி உடையதென்று முனிவர் எழுவர் தமது யோக சக்தியால் உணர்ந்து, அதனை இந்திரனிடமிருந்து பெற்றுச் சென்று, வேள்வித் தீயிலிட்டு அதன் வேகத்தைக் குறைத்து, அதனைத் தம் மனைவியரை உட்கொள்ளச் சொல்லினர். அருந்ததி ஒழிந்த அறுவர் அதனை உண்டு சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளைப் பெற்றனர். இந்திரன் பொறாமை கொண்டு அக் குழந்தைகளின் மீது தன் வச்சிராயுதத்தை எறிய, குழந்தைகள் ஆறும் ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளும் உடைய ஒரே குழந்தையாய் மாறிவிட்டன. கடுவன் இளவெயினனார் என்ற புலவர் இச்செய்தியினை 5 ஆம் பரிபாடலில் (வரி 26-55) கூறியுள்ளார். இக்கதையை ஒப்புக்கொண்டாற்போலவே ஆசிரியர் நல்லந்துவனார் எட்டாம் பரிபாடலில் (வரி 127, 128), மறுமிடற் றண்ணற்கு மாசிலோன் தந்த நெறிநீர் அருவி அசும்புறு செல்வம் என்று பாடியுள்ளார். முருகன் பிறந்தவுடன் இந்திரன் பொறாமை கொண்டு அக் குழந்தையைத் தன் வச்சிராயுதத்தால் தாக்கினான் என்று கடுவன் இளவெயினனார் பாடியதற்கேற்பவே, கேசவனார் தம் பாடலில் (பரிபாடல் 14, வரி 25-26), பிறந்த ஞான்றே நின்னை யுட்கிச் சிறந்தோர் அஞ்சிய சீருடை யோயே என்று பாடியுள்ளது நோக்கற்பாலது. திருமுருகாற்றுப்படையில் முருகன் பிறப்பு திருமுருகாற்றுப்படையில் (வரி 254-255), ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ என்னும் அடிகள் முருகனது பிறப்பைக் குறிக்கின்றன. நிலம், நீர், தீ, காற்று, விசும்பு ஆகிய ஐவருள் ஒருவன் தன் உள்ளங்கையில் (சிவன் தந்ததைப்) பெற்றான். சிவன் எதைத் தந்தான் என்பது, மூலத்தில் இல்லை. இப்பகுதிக்கு உரையும் விளக்கமும் வரைந்துள்ள நச்சினார்க்கினியர், "ஐவருள் ஒருவன் தீ. அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/62&oldid=793373" இலிருந்து மீள்விக்கப்பட்டது