சிலப்பதிகார காலம் 73 இவ்வாறே ஒவ்வொரு தொகை நூற்பாடலும் குறிப்பிடப்பட்ட அகப்பொருள் அல்லது புறப்பொருள் கருத்துக்காகப் பாடப்பட்டது. சிலப்பதிகாரம் கோவலன் - கண்ணகி வரலாறு கூறும் பெரிய காப்பியம். ஆதலின் தலைவன் தலைவியர் காலச் சமயச் செய்திகளையும் பிறவற்றையும் விரிவாக எடுத்துக் கூற ஆசிரியருக்கு வாய்ப்பு மிகுதியாகக் கிடைத்துள்ளது. மணிமேகலை பெளத்த சமயத்தைப் பற்றிய காவியம் ஆதலின் அதன்கண் பெளத்த சமயச் செய்திகள் நிரம்பப் பேசப்பட்டுள்ளன. காவியப் பாத்திரங்கட்கேற்பநிகழ்ச்சிகட்கும் ஏற்பச் சமயச் செய்திகளோ பிறவோ காவியத்தில் விரித்துப் பேசப்படல் இயல்பு. இந்த வேறுபாட்டை உளங்கொள்ளுதல் வேண்டும். இதனாற்றான் தொகைநூற் பாடல்களில் சமயச் செய்திகள் விரிவாகப் பேசப்படவில்லை; காப்பியத்தில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. 8. 'சிலப்பதிகாரத்தில் காவிரி-காவேரி என்று சொல்லப்பட்டது. இதனாலும் சிலப்பதிகார காலம் பிற்பட்டது என்பது தெளிவு", என்று பிள்ளையவர்கள் கூறியுள்ளனர். சிலப்பதிகாரம் கானல் வரியில், பாட்டைப் பாடுவோர் காவேரி என்று காவிரியை அழைத்ததாக இளங்கோவடி கள் குறித்துள்ளாரே தவிர, பிற எல்லா இடங்களிலும் காவிரி என்றே குறித்துள்ளமை நோக்கற்பாலது. சிலப்பதி காரம் நாடகக் காப்பியம். ஆதலின், அவரவர் கையாளுகிற சொற்களை அவரவர் பேச்சில் அல்லது பாடலில் வைத்து வழங்குதல் உண்மைப் புலவர் இயல்பாகும். இளங்கோவடிகள் இம் முறையைத்தான் பின்பற்றியுள்ளார். கோவலன் யாழை வாங்கிக் காவேரி என்று அழைத்துப் பாடத் தொடங்கினான் என்பதைக் கூறும் இடத்திலும் இளங்கோவடிகள், காவிரியை நோக்கினவுங் கடற்கானல் வரிப்பாணியும் மாதவிதன் மனமகிழ வாசித்தல் தொடங்குமன். என்று கூறியிருத்தல் கவனிக்கத்தகும். முருகன் கனவிற் கூறியபடி அரசன் ஓர் ஊரின் கிணற்றிலிருந்து வேலை எடுத்துத் தன் பகைவனை வென்றான். வேல் எடுக்கப்பட்ட கிணற்றைக் கொண்ட ஊர் “வேலூர் எனப் பெயர் பெற்றது என்று சங்க நூலான சிறுபாணாற்றுப்படையிலேயே (வரி 172-173) புராணக் கதை இடம் பெற்றுள்ளதைப் புலவர் அனைவரும் அறிவர். சமயத் தொடர்பான இத்தகைய கதைகள் சங்க காலத்திற்குப் புதியவை அல்ல என்பதைப் புறநானூற்றுப் பாடல்களாலும் (174 முதலியன)
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/80
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை