பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 கால ஆராய்ச்சி 5. ஒவ்வொரு கலியிலும் ஒரே துறை அமைந்த பல பாடல்கள் சுவையற்ற நிலையில் பாடப்பட்டுள்ள சான்றாகத் தலைவன் மடலூர்தல் பற்றி நான்கு பாடல்களும் (138-141), காமவெறி கொண்ட தலைவி பிதற்றல் பற்றிய ஆறு பாடல்களும் (143-148) வந்துள்ளன. 6. சில செய்யுட்கள் தோழி-தலைவி உரையாடல் (60), தலைவி-தலைவன் உரையாடல் (64) முறையில் அமைந்துள்ளன. 7. பிற அக நூல்களில் காணப்பெறாத நின்றீத்தை (93), போசீத்தை (93), பாடித்தை (130), இஃதொத்தன் (84) போன்ற சொற்கள் இதில் இடம் பெற்றுள்ளன. 8. நற்றிணை முதலிய நூல்களில் காமக்கிழத்தி பேசுவதாகச் செய்யுட்கள் இடம் பெறவில்லை. ஆயின், இந்நூலில் சில செய்யுட்கள் (69, 72, 73) இடம் பெற்றுள்ளன. 9. கலிப்பாக்களில் வரும் பெரும்பாலரான தலைவர் தலைவியர் வினைவல பாங்கர். ஆதலால் தலைவி, தலைவனை 'ஏடா என்றும், தலைவன் தலைவியை ஏடி என்றும் அழைப்பதைக் காண்கிறோம் (87, 80). 10. மருதக்கலியில் வந்துள்ன கூனி-குறளன் காதல் உரையாடல் (94) நற்றிணை முதலிய நூல்களில் காணுமாறு இல்லை. 11. வியாழனும் வெள்ளியும் வட மொழியில் அற நூல்கள் எழுதியுள்ளனர். அந்நூல்களின்படி நாடாண்டவனே என்று தலைவன் ஒரு செய்யுளில் (99) அழைக்கப் படுகிறான். இத்தகைய செய்தி வேறு தொகை நூல்களில் இல்லை என்பது கவனிக்கத்தகும். புராணக் கதைகள் சிவபெருமான் முப்புரம் எரித்தது (1, 150), துரியோதனன் பாண்டவரை அரக்கு மாளிகையில் கொல்ல முயன்றமை (25), முருகன்-சூரபதுமன் போர் (27), இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தது (38), வீமன் துரியோதனனைத் துடையில் அடித்தது (52), கண்ணன் கம்சனால் ஏவப்பட்ட மல்லரை அழித்தது (52, 134), வீமன் துச்சாதனன் நெஞ்சைப் பிளந்தது (101), சிவன் எமனை உதைத்தமை (101), அசுவத்தாமன் தன் தந்தையைக் கொன்ற சிகண்டியைக் கொன்றமை (101), கண்ணன் கம்சனால் ஏவப்பட்ட குதிரை உருவத்தில் வந்த அசுரனைக் கொன்றமை (103), கண்ணன் ாள் ஆழியால் மறைத்த சூரியனை மீட்டமை (104), கண்ணன் னுக்கு மகன் (108), ஊர்வசி, திலோத்தமை பற்றிய செய்தி யயாதி அரசன் கதை (139), சிவன் தன் சடையில் கங்கையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/85&oldid=793427" இலிருந்து மீள்விக்கப்பட்டது