பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 蕊f@ ஆராய்ச்சி இன்றுள்ள பரிபாடல் என்னும் நூலில் இடம் பெற்றுள்ள பாக்கள் அகம் புறம் ஆகிய இரண்டையும் பற்றியவை. எட்டுத்தொகை நூல்களுள் புறநானூறும் பதிற்றுப்பத்தும் புறப்பொருள் நூல்கள் என்பதும், ஏனைய ஐந்தும் அகப்பொருள் பற்றிய நூல்கள் என்பதும் முன்பே கூறப்பட்டன. அகப்பொருள் நூல்கள் ஐந்து திணைகளையும் பேசும்; ஆனால், பரிபாடல்கள் ஐந்து திணைகளையும் நிலைக்களனாகக் கொண்டு அகப்பொருள் செய்திகளைக் கூறவில்லை. பிற அகப்பொருள் நூல்களில் பேரரசர் சிற்றரசர் முதலியோர் பற்றிய குறிப்புக்களே இருக்கும். ஆனால், பரிபாடலில் அவற்றைப் பற்றிய குறிப்புக்களே இல்லை; கலித்தொகையில் இருத்தல்போலவே பொதுவாகப் பாண்டியர்களைப் பற்றியும் அவர்களது நாட்டைப் பற்றியுமே குறிப்புக்கள் உள்ளன. பரிபாடலிலுள்ள புறப்பொருட் பகுதியிலும் பிற அரசர்களைப் பற்றிப் பேச்சே இல்லை. திருமாலிருஞ்சோலையில் உள்ள திருமால், திருப்பரங்குன்றத்து முருகன் ஆகிய தெய்வங்கள் பற்றிய தோத்திரப் பாக்களாகவே பல அமைந்துள்ளன. வையை பற்றிய பாக்களும், அதற்குத் தெய்வத்தன்மை கூறி அதனை வழிபடும் பாடல்களாகவே அமைந்துள்ளன. பிற தொகை நூல்களில் ஐந்திணைக் கடவுளர் ஆங்காங்குக் குறிக்கப்பட்டுள்ளனர்; ஆயின், பரிபாடலில் குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகனும் முல்லை நிலக் கடவுளாகிய திருமாலுமே விரிவாகப் பாடப்பெற்றுள்ளனர். இத்தகைய பாக்களை வேறு தொகை நூல்களில் காணல் இயலாது. இந் நூற்பாக்களின் நடை எளிமை வாய்ந்தது. இப்பாக்கள் வருணனை மிகுந்தவை. ஒவ்வொரு பாவிற்கும் இசை கூறப்பட்டிருப்பதால் இவை இசையோடு பாடுவதற்கு அமைந்தவை என்பது தெரிகிறது. ஆதலால் இவை மக்களுடைய பேச்சு வழக்குச் சொற்களையும் ஆங்காங்குப் பெற்றுள்ளன. இங்ங்னம் இப்பாடல்கள் 'பா' வகையிலும் செய்யுள் நடையிலும் வருணனையிலும் எண்ணத்திலும் முறை வைப்பிலும் பிறவற்றிலும் மாறுபட்டுள்ளமை அறியத்தகும். அழிந்தன போக இன்று இந்நூலில் இருப்பவை 22 பாடல்களாகும். (தொல்காப்பிய உரையிலும், புறத்திரட்டிலும் வேறு மூன்று பாடல்கள் கிடைத்துள) இவற்றுள் திருமாலைப் பற்றியவை ஆறு முருகனைப் பற்றியவை எட்டு, வையை பற்றியவை எட்டு. மதுரை, வையையாறு, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ் சோலைமலை ஆகியவை பற்றிய செய்திகளே இப்பாடல்களிற் காணப்படுகின்றன. இவற்றை நோக்க, இந் நூற்பாக்கள் பாண்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/93&oldid=793446" இலிருந்து மீள்விக்கப்பட்டது