பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலின் காலம் 91 என்று மதுரை மருதன் இளநாகனார் பாடியுள்ளார். இம் மருதன் இளநாகனார்க்கு முன்பே அந்துவன் என்ற புலவர் திருப்பரங்குன்றத்து முருகனைப் பாடியுள்ளார் என்பது இவ்வடிகளால் தெளிவாகிறதன்றோ? நெடுநல் யானை அடுபோர்ச் செழியன் கொடிநுடங்கு மறுகிற் கூடற் குடாஅது பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய ஒடியா விழவின் நெடியோன் குன்றம் என்றும் அகநானூற்று 149ஆம் பாடல் அடிகளும் சங்க காலத்திலேயே திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் இருந்ததை மெய்ப்பிக்கின்றன; அன்றியும் அக்கோவிலில் அக்காலத்தில் ஒய்வின்றி விழாக்கள் நடைபெற்றமையையும் இவ்வரிகள் புலப்படுத்துகின்றன. இவ்வரிகளைக் கொண்ட பாடலைப் பாடியவர் எருக்காட்டுர்த் தாயங்கண்ணனார் என்பவர். எனவே, திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் சங்க காலத்திலேயே இருந்தது என்பது தெளிவாதல் காண்க. 5. தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற் றொன்முது கடவுள் என வரும் மதுரைக்காஞ்சி அடிகட்கு (வரி 40-41), 'இராவணனைத் தமிழ் நாட்டையாளதபடி போக்கின.கிட்டுதற்கரிய வலியினையுடைய பழமை முதிர்ந்த அகத்தியன்" என்று நச்சினார்க்கினியர் உரை கூறியுள்ளார். இந்நச்சினார்க்கினியரே தொல்காப்பியப் பாயிரவுரையில், "அகத்தியர் பொதியின் கண் இருந்து இராவணனைக் கந்தருவத்தாற் பிணித்து, இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கி' என்று கூறியுள்ளார். மேலே கூறப்பெற்ற மதுரைக்காஞ்சி அடிகளுக்கு நச்சினார்க்கினியர் உரையைத் தந்த பத்துப்பாட்டின் பதிப் பாசிரியராகிய டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் அடிக் குறிப்பில், "தென்னாட்டை ஆண்டு குடிகளைத் துன்புறுத்தி வந்த இராவணனை அகத்தியர் பொதியின்மலை உருகும்படி இசை பாடி இலங்கைக்குப் போக்கினர் என்பது பண்டை வரலாறு", என்று கூறி, அகத்தியர் இசையில் வல்லுநர் என்பதற்கும், அகத்தியர் யாழ் வாசித்துப் பொதியினை உருகச் செய்தனர் என்பதற்கும், இராவணனை இசை பாடி அடக்கினர் என்பதற்கும் திருக்கயிலாய ஞானவுலா, தக்கயாகப் பரணி, கோணசயில மாலை, வெங்கையுலா, தஞ்சைவாணன் கோவை என்னும் இலக்கியங்களிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/98&oldid=793451" இலிருந்து மீள்விக்கப்பட்டது