பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 83 காவலன் எங்கள் கனவைப்பாஞ் சோழேசன் மாவலி கங்கை மணிவாரி-ஆவனலென் - றப்புளங்கை தோய்க்க வதில்வா ரியமுத்தைக் கொப்புளமென் றுதுங் குரங்கு. (125) எங்களைக் காக்கும் பெருமானும், எங்களுடைய சிறந்த சேமநிதி போன்றோனுமான சோழமன்னவன், மிக்க ஆற்றலுடைய வனாகச் சென்று வெற்றிகொண்டு, மர்வலி கங்கைக் கரையிடத்தே கிடைத்த இரத்தினங்களைத் தன் கையிலே வாரி, 'ஆ நெருப்புக் கங்குகள்!' என்று சொல்லியவனாகத் தண்ணிரினுள் தன் அழகிய கைகளைத் தோய்த்தான். கையினை மேலே அவன் எடுக்கும் போது வாரிக் கொணர்ந்த முத்துக்களைக் குரங்கானது அந்நெருப்புச் சுட்ப கொப்புளங்கள் என்று கருதி ஊதுவதாயிற்று. இது கற்பனைதான், என்றாலும் இதனிடத்தே காணப் படுகின்ற நயத்தினைக் கண்டு இன்புறுக செம்மணிகள் நெருப்புக் கங்குகளாகவும், அடுத்து வாரிய முத்துக்கள் நெருப்புச் சுட்ட கொப்புளங்களாகவும் கூறப்பட்டமை காண்க. 'மாவலி கங்கை' இலங்கையிலுள்ள பேராறு. ஆலங்குடியான் ‘ஆலங்குடி ஒரு சிவத்தலம். இந்தத் தலத்துப் பெருமானை ‘ஆலங்குடியான்' என்பார்கள். அது, நஞ்சை உண்ணாதவன் என்றும் பொருள் தரும் அல்லவா! இதனை வைத்துப் பாடுகிறார் கவிஞர். ஆலங் குடியானை யாலால முண்டானை ஆலங் குடியானென் றார் சொன்னார் - ஆலங் குடியானே யாயிற் குவலயத்தோ ரெல்லாம் மடியாரோ மண்மீதி லே. (126) திருவாலங்குடியிலே திருக்கோயில் கொண்டிருக்கிற எம்பெருமானை, ஆலகால நஞ்சினை உண்ட அருளாளனை, நஞ்சினைக் குடியாதவன் என்று சொன்னவர்கள் யார்? அவன் அன்று அந்த ஆலகால விஷத்தை குடியாதிருந்தான் என்றால், உலகத்தாரெல்லாம் மண்மேல் மடிந்து வீழ்ந்திருக்க மாட்டார்களோ? ‘ஆலங்குடி என்ற சொல் முதலில் ஆலங்குடி என்ற ஊரினையும், 'ஆலங்குடியான்' என அடுத்து நஞ்சினை உண்ணாதவன் என்பதனையும், 'ஆலங்குடியானேயாயின்' என நஞ்சினை உண்ணா திருந்தானேயாயின் என அவன் உலகுக்கு அருளிய கருணைச் சிறப்பையும் காட்டுதல் காண்க