பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் சிவபெருமானே! நீர் முன் காலத்திலே நஞ்சுதனைத் தின்றீரே அது எதனால் என்பதனை எனக்குச் சொல்வீராக” உலக வாழ்விலே வெறுப்பு ஏற்படும்போது, ஒருவர் நஞ்சினை உண்டு உயிரை விட்டுவிட முயல்வது இயல்பு, அதனை மனத்துட்கொண்டு, பெருமான் நஞ்சுண்ட செயலுக்கும் இப்படிக் காரணங்களைக் கற்பிக்கிறார் கவிஞர். மழபாடியார்! திருமழபாடி என்னும் திருநகரிலே கோயில் கொண்டிருக்கிற சிவபெருமானைத் தரிசிக்கச்சென்றபோது, கவிஞர் பாடியது இது. 'பெயர்தான் அவருக்கு வயித்தியநாதர்! அவருடைய நோய் களையே அவரால் தீர்க்கமுடியவில்லை? அவரெங்கே பிறருடைய நோய்களைத் தீர்க்கப்போகிறார்? என்று அவரை நிந்திப்பதாக அமைந்தது இச்செய்யுள். வலியமழ பாடி வயித்தியநா தர்க்குத் தலைவலியாம் நீரேற்றந் தானாம்-குலைவலியாம் கையோடு சூலையாம் கால்வாத மாங்கண்மேல் ஐயோ வெழுஞாயி றாம். (162) “மழபாடியிலே கோயில் கொண்டிருக்கிறார் வல்லமை யுடைய வயித்தியநாதர். அவருக்குத் தலைவலியாம்; நீரேற்றமாம்; குலைவலியாம்; கால்வாதமாம்; கண்மேல் எழுஞாயிறாம்; இத்தகைய அவரெங்கே பிறரைக் குணப்படுத்தப் போகிறார். "தலை” வலிமைகொண்ட சடைக்கற்றையாம்; தலை மேல் கங்கையாகிய நீர் உயர்வு பெற்றிருக்கிறதாம், அனைத்தையும் அழியச் செய்யும் ஆற்றல் உடையவரும் அவராம், கையிலே அவருக்குத் திருவோடாம்; சூலம் ஏந்தியவரும் அவராம்; அவரது கண்களோ எழுகின்ற ஞாயிற்றைப்போல நெருப்புப் பிழம்புகளாக விளங்குகின்றனவாம். இப்படிப் பெருமானைப் போற்றுவதாகவும் உரைகொள்க. அழகரென்றார் யார்? “அழகர் கோயிலிலே விளங்கும் பிரானுக்குச் சோலை மலை அழகர்’ என்றும் ஒரு பெயருண்டு. 'அவரை அழகரென்று எவ்வாறு சொல்ல முடியும்? அவருக்கு அப்படிப் பேரிட்ட அறியாமை உடையவர் யார்?" இப்படிக் கேட்கிறார் கவிஞர். மீனமுக மாமைமுக மேதினியெ லாமிடந்த ஏனமுகஞ் சிங்கமுகம் என்னாமல்-ஞானப் பழகரென்றுஞ் சோலைமலைப் பண்பரென்று மும்மை அழகரென்றும் பேரிட்டார் யார்? (163)