பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 137 வான கந்தனில் வைக் வோவிரு கால்வி லங்கிடு விக்கவோ கற்க ரங்கொடு சாட வோவொரு காரியத்தினை யேவுமே. (219) தான் போன இடங்களில் எல்லாம் அவமானப்பட்டுத் தலையில் பொட்டு எழத்தக்க வகையில் பிறராற் குட்டப் பட்டுப் புண்படைத்தவன் புலிக்குட்டிச் சிங்கன் என்பவன். அத்தகைய இழிந்த மனத்தவனாகிய அவன் அறிவற்ற மூடன் பெற்ற புதல்வனும் ஆவான். அவன் அம்பு செலுத்துபவன் என்றும் கூறிக்கொள்வான். மானங்கெட்டவன்! வெட்கங்கெட்டவன்! ஒழுக்கங்கெட்டவன்! மிகக் கேவலமானவன் அவன்! அத்தகைய சிறப்புடைய புலிக்குட்டிச் சிங்கனின் எல்லைக்குள் சென்றுவிட்டு, இறங்கி வருகின்ற பெருமை யுடையவரே! உம் கூந்தலில் நிறைந்திருக்கும் பேனையும் ஈரையும் எடுக்கவோ? சடை பின்னி வேப்பெண்ணெய் வார்க்கவோ? அவனைப் பிரிந்து வாடும் தங்கள் கண்களுக்கு மை எழுதவோ? அல்லது உமக்குக் கிழிந்த கந்தலை உடுத்து விடவோ? - காட்டில் கொண்டு விட்டுவிடவோ? அல்லது காலில் விலங்கிட்டு வைக்கவோ? அல்லது, கையில் கற்களை எடுத்து உம்மீது எறிந்து உம்மைக் கொன்றுவிடவோ? இவற்றுள் எதனைச் செய்யலாம்? அதனை நீரே கூறுவீராக என்பது பொருள். காமத்தைக் காதலென மயங்கி அறிவிழந்து கண்டவன் பின்னே சென்ற பெண்களுள் பலர் இந்த நிலைக்கே ஆளாவர். அவள் அடைந்துவிட்ட அவல நிலையும், அதைக் கண்டு கொதித்து, அவளுடைய உறவினர் கொள்ளும் ஆவேசவுணர்வும் இச் செய்யுளிற் காணப்படும். குடும்பத்தின் தகுதிக்குக் குறைவு ஏற்படும்போது அன்பு காட்டியும் அருமை பாராட்டியும் வளர்த்து ஆளாக்கிய குலக்கொடியையே வெறுத்து ஒதுக்கும் மனநிலையையே மக்கள் பெரும்பாலும் கொள்வர். அந்த மனநிலையின் விளக்கமாகவும் இதனைக் கொள்ளுக. ☾☾☾