பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் துரயை சக்தி; உமையம்மை. வடம் - ஆலிலை. பாகு - வெல்லப்பாகு. ரா மா ரா மா கோவிந்தா 'ஒரு விகடன் ஆழகான ஒரு பெண்ணைப் பார்த்தான்; வியப்புடன் நிற்கின்றான். "ராமா ராமா! கோவிந்தா வேங்கடவா! நாராயணா' என்று இடையிடையே கூறிய வண்ணம் அவள் அழகை வியந்தும் கூறுகின்றான். அவன் கூற்றாக, மேற்கண்ட குறிப்புப் பொருந்த ஒரு வெண்பாச் சொல்லுக என்றார் ஒரு புலவர். இந்தோ திலகநுதல் ராமரா மாவனசக் கொந்தோ களபமுலை கோவிந்தா - சந்தமுறும் வேலோ இணைவிழிகள் வேங்கடவா நல்லவயி றாலோகா ணாரா யனா. (39) ராமராமா! - (இந்தப் பெண்ணுக்கு) திலக நுதல் இந்தோ திலகம் விளங்கும் நெற்றிதான் பிறைச்சந்திரனோ? கோவிந்தா! (இந்தப் பெண்ணுக்கு) களப முலை வனசக் கொந்தோ கலவைச் சாந்தம் அணிந்த தனங்கள் தாம் தாமரை "முகைகளோ? வேங்கடவா (இந்தப் பெண்ணுக்கு) இணை விழிகள் சந்தம் உறும் வேலோ இரு விழிகளும் அழகு மிகுந்த வேல்கள்தாமோ? நாராயணா' (இந்தப் பெண்ணுக்கு) நல்ல வயிறு ஆலோ - நல்ல வயிறு ஆலிவலதானோ? காண், அசை, இந்து நிலவு நெற்றிக்கு உவமை கூறப் பெற்றதனாலே 'பிறை நிலவு என்று பொருள் உரைக்கப் பெற்றது. செருப்பு-விளக்குமாறு ஒரு புலவருக்குக் கவிஞரை இழிவுபடுத்தவேண்டும் என்ற எண்ணம். “செருப்பு என்று தொடங்கி, விளக்குமாறு என்று முடித்து ஒரு வெண்பாவைப் பாடமுடியுமா?" என்றார். அவருடைய கருத்தின் தன்மையைப் புரிந்துகொண்டார் கவிஞர். அந்தச் சொற்களையே அமைத்துப்-பாடினும் அதனாற் பொருட்சுவை மிக்கதாகத் தம் செய்யுளை அமைத்து அவரைத் திகைப்படையச் செய்கிறார். முருகப் பெருமானின் மீது காதல்கொண்ட ஒரு நங்கையானவள், பொய்கையிடத்துத் தாமரையிலே வந்து படிந்திருக்கும் வண்டிடத்தே, முருகனிடம் செல்லுவதற்கான வழியினை வினவி அறிவதுபோல அமைந்துள்ளது வெண்பா. செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும் வேலன் பொருப்புக்கு நாயகனைப் புல்ல-மறுப்புக்குத்