பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹிமாலய மருந்து சிந்திரனுக்கு எத்தனையோ புதுப்புது எண்ணங் கள் உதயமாகும். அவற்றையெல்லாம் காரியத்திலே கொண்டு செலுத்தினல் வியாபாரத்தில் நிச்சய மாகப் பெரிய வெற்றி கிடைக்கும். அதில் சந்தேகமே கிடையாது. ஆனல், சந்திரன் என்ருவது தன் எண்ணங்களைப் பய்ன்படுத்தினை? அதுதான் இல்லை. அவனிடத்திலே ஒரு பெரும் குறை உண்டு. அவ னுக்குத் தன்னம்பிக்கை கிடையாது. தன் எண்ணங் களிலே, ஏன் தன் மேலேயே அவனுக்கு நம்பிக்கை இல்லை. தன்னல் என்ன செய்ய முடியும் என்று நினைத்துக்கொண்டு மெளனமாக இருந்துவிடுவான். இவ்வாறு தன்னம்பிக்கை யற்ற அவனுக்கு உத்தியோகத்தில் உயர்வு கிடைக்காததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பத்து ஆண்டுகளுக்கு மு ன் பு தாதாரண குமாஸ்தாவாக ஆரம்பித்தவன் இன்னும் அதே நிலையில்தான் இருக்கிருன். பதவியிலே ஒருவித மாறுதலும் ஏற்படவில்லை. சாதாரணமாகச் சம்ப இத்திலே வருஷமொன்றிற்குக் கிடைக்கும் ஒரு இபாய் உயர்வைத் தவிர வேறு உயர்வும் கிடைக்க வில்லை. அது அவனுக்குப் பெரிய வேதனையை அளித்தது. இல்யாணமாகாத காலத்தில் அவன் அதைப்பற்றி அவ்வளவு கவலைப்படவில்லை. இப்பொழுது கல்யாண !ாகி ஐந்து வருஷங்கள் ஆகிவிட்டன் ; இரண்டு இழந்தைகளும் பிறந்திருக்கின்றன. சந்திரனுக்கு அவன் மனைவியிடத்திலும் குழந்தை ளிேடத் திலும் அளவற்ற அன்புண்டு. அவர்களைச் சந்