பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹிமாலய மருந்து 49 ாப்பிட்டால் உடனே அற்புதமாக உங்களுக்கு அந்தத் தன்னம்பிக்கை வளரும். நீங்கள் புது மனி தர்களாவீர்கள். இந்த மருந்து இமயமலையில் எடுத்த முலிகைகளால் தயார் செய்யப்பட்டது. இமய மலையில் தவம் செய்யும் என் குருநாதர் உங்களைப் போன்ற மக்களைக் கடைத்தேற்ற வேண்டுமென்று இந்த மருந்தைத் தயாரித்துக் கொடுத்து என்னை உலகத்திற்கு அனுப்பினர். இந்த மருந்தின் விலை இரண்டே ரூபாய்தான். லாபத்திற்காக இதை விற்க வில்லை. இமயமலையிலிருந்து வந்து திரும்புவதற்கு வழிச் செலவுக்காக இந்தப் பணம் வாங்குகிறேன். நான் ஒரு சந்நியாசி. எனக்குப் பணத்திலே ஆசை கிடையாது. இது சத்தியம்’ என்று அவன் பிரசங் தத்தை முடித்துவிட்டுச் சுற்று முற்றும் பார்த்தான். அவனுடைய தாடியும் ஒளி பொருந்திய கண்களும் பார்ப்பவர்கள் மனத்திலே மரியாதையையும் கவர்ச் தியையும் உண்டாக்கின. இருந்தாலும் அவன் காண்பித்த மருந்தை ாங்கு வதற்கு யாரும் முன்வரக் காணுேம். சந்திர வக்கு அவனுடைய வார்த்தைகள் ஒரு புதிய நம்பிக் கயை அளித்தன. வாழ்க்கையில் முன்னேற்றமடை தற்கு உதவி கிடைத்துவிட்டதாக அவன் கருதி ரன். உடனே தன் ஜேபியிலிருந்த அம்மாதச் சம்ப த்தில் இரண்டு ரூபாயை எடுத் துக்கொண்டு பின்னலே சென்ருன். மற்றவர்கள் ஒருவரும் வாங்க 1ல்லையே, தான் மட்டும் வாங்கினல் மற்றவர்கள் iன்ன ஏளனமாகக் கருதுவார்களே என்ற எண்ணம் அவனைத் தடுக்கவில்லை. அவனுடைய நெருக்கடியான iலம்ை அவனுக்குத் தைரியம் கொடுத்தது. !ருந்தை வாங்கிக்கொண்டான். அவன் விர்ங்கின் இப் பின்தொடர்ந்து பலபேர் மருந்து வாங்க முன் இத்ார்கள். 4