பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரன் தன் கண்களிலே புதிய ஒளியுடன் வீட் டுக்குச் சென்ருன். உடனே மருந்தின் சக்தியைப் பரீட்சை செய்து பார்க்க வேண்டுமென்ற ஆவல் பொங்கிற்று. இரண்டு துளி மருந்தைச் சிறிதளவு தண்ணிரில் விட்டு ஆவலோடு பருகினன். சுறுசுறுவென்று மருந்து வாயிலே சுவைத்தது. தன்னுடைய உடம்பிலே ஒரு புதிய சக்தி புகுந்த்து போல அவனுக்குத் தோன்றியது. தன் கவலையெல் லாம் பஞ்சாய்ப் பறந்து விட்டதென்று அவன் உள்ளம் பூரித்தான். கமலாவுடன் அன்றிரவு அவன் எதிர்பாராத விதமாய்க் குதுாகலமாய் வார்த்தை யாடிக் கொண்டிருந்தான். மறுநாள் காலையிலே இன்னும் இரண்டு சொட்டு மருந்தைச் சந்திரன் உட்கொண்டான். மேலும் மேலும் அவன் தன்னம்பிக்கை வளரலாயிற்று. மரு தைப் பையிலே போட்டுக்கொண்டு பத்து மணிக்கு வழக்கம்போலக் காரியாலயம் போய்ச் சேர்ந்தான் முதலாளியைப் பார்க்கச் செல்வதற்கு முன் இன்னும் ஒரு முறை மருந்தைப் பருகினன் முதலாளி அவனிடத்திலே ஒரு புதிய துடிப்பு இரு பதைக் கண்டார். அவர் எதிர்பார்த்தபடி சந்திரள் உடனே சர்ட்டிபிகேட் கேட்கவில்லை. அதற்கு பதிலாக அவன் கூந்தல் தைலத்தை விளம்பர படுத்துவதற்கு ஒரு புதிய யுக்தியை அழகாக விவரி, தான். முதலாளியின் உள்ளம் அந்த யோசனையி.ே லயித்துவிட்ட்து. - அவர் சந்திரனைப் பார்த்து, சந்திரா, ೭6Tತ್ಯ இந்த மாதிரி நல்ல திறமை இருக்கிறதென்று நா முதலிலிருந்தே நினைத்தேன். ஆனல் இதுவரையிலு அதை நீ வெளியில் காண்பிக்க முன்வரவில்லை. இ நீ வேறு வேலை தேட வேண்டிய அவசியமில்லை. இ