பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹிமாலய மருந்து 53. கிடைத்தன. ஆனல் நாட்கள் ஒட ஒட அவனுக்குப் புதியதோர் பெரிய ஏக்கம் உண்டாயிற் இ). . ' புட்டியிலிருந்த மருந்து குறைந்துகொண்டே வநதது. அது தீர்ந்து போனல்? ஐயோ அதை நினைக் கவும் சந்திரனுக்குப் பயமாக இருந்தது. எப்படி பாவது அந்தப் பக்கிரியைத் தேடிப் பிடித்து நிறைய வாங் கி வைத்துக்கொள்ள வேண்டுமென்று நினைத்தான். அவனுடைய விலாசத்தை முன் யோசனையோடு வாங்கிவைக்கவில்லையே என்று தன்னைத்தானே நொந்துகொண்டான். . ஒவ்வொரு நாள் மாலையும் அவனைத் தேடிச் சென்னைப் பட்டினத்து வீதி வீதியாகச் சந்திரன் அலேய ஆரம்பித்தான். அவனுடைய முயற்சி பல நாட்கள் பலன் அளிக்கவில்லை. மருந்தில்லாமல் தன் வாழ்க்கை பழையபடி மாறிவிடுமே என்ற பயம் முன்பிருந்த கவலைகளையெல்லாம்விட அதிகத் துன் பத்தை விளைவித்தது. அவனுக்குத் துரக்கங்கூட வரவில்லை. இப்பொழுது பணம் இருக்கிறது; ஆனல் அவர் ஏனே உற்சாகமிழந்து காணப்படுகிருர்’ என்று கமலா வருந்தினுள். சந்திரன் தன்னம்பிக் கைக்கு மருந்து சாப்பிடும் விஷயம் அவளுக்குத் தெரி ாது. அதை அவன் யாரிடமும் கூருமல் மறைத்து வைத்திருந்தான். மருந்து அநேகமாகத் தீர்ந்துவிட்டது. சந்திரன் இந்தப் பக்கிரியைத் தேடும் முயற்சியைத் தீவிரமாக் இன். மாலை நேரத்தில் வாடகைக் காரை அமர்த் நிக்கொண்டு வி தி வீதியாகச் சுற்றினன். ஒரு நாள் சந்திரன் அந்தப் பக்கிரியை எதிர் திராத விதமாக வீதியில் காண முடிந்தது. ஆனல் அந்த நிலையிலே அவனைக் காண அவன் எதிர்