பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தங்கச் சங்கிலி பார்க்கவே இல்லை. சந்திரன் பக்கிரியைத் தேடிக் கொண்டு ஒரு காரில் வேகமாகப் போய்க்கொன் டிருந்தான். துரத்திலே அந்தப் பக்கிரி கையிலே 96 பெட்டியை எடுத்துக்கொண்டு பாதையை ஒரு புறத் திலிருந்து மறு புறத்திற்குக் கடந்துகொண்டிருப் பதைக் கண்டான். அவனுக்கு உண்டான சந்தோ ஷத்திற்கு அளவேயில்லை. ஆனல் அடுத்த கணத்திலே எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அந்தப் பக்கிரி என்னவே யோசனையில் ஆழ்ந்து நடந்துகொண்டிருந்தால் போலிருக்கிறது. எதிர்ப் பக்கத்திலிருந்து வேகமாக வந்த ராணுவ லாரி ஒன்று அவன்மீது மோதி விட்டது. பக்கிரி பிரக்ஞை அற்றுக் கீழேவிழுந்தான் அவன் பெடடியிலிருந்த புட்டிகளெல்லாம் உடைந்து அவற்றிலிருந்த மருந்து வீதியில் வழிந்து ஓடியது. சந்திரன் அளவற்ற துக்கத்தோடு பக்கிரியிட ஒடினன். அவனைத் துாக்கிக் காரில் போட்டு கொண்டு ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போனன். அவன் எவ்வளவோ முயன்றும் பக்கிரி பிழைக் வில்லை.ஒர் அரைமணி நேரம் கழித்து அவனுக்குச்சு உணர்வு வந்தது. மறுபடியும்,உணர்வு தப்பிவிட்டது பிறகு அவன் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. சுய உணர்வு வந்திருந்தபோது பக்கிரி தனக்கு சந்திரன் செய்த உபகாரத்தை நன்குணர்ந்தான் அவனை வாயார வாழ்த்தினன். "என் அந்திய கால, தில் நீ செய்த உதவிக்கு நான் என்ன கைம்மா! செய்ய முடியும்?” என்று அவன் நன்றியறிதலோ பேசினன். நீ உயிர் பிழைக்க வேண்டும் என்ப தான் என் ஆசை” என்று சந்திரன் தன் உண்ை யான;ஆவலை வெளியிட்டான். -