பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நண்பன் விராசாமி 85 |த்திற்கு வைக்கோல் குவித்திருந்தது. வீராசாமியை இந்த வைக்கோல் புதருக்குள்ளிருந்து வெளியே விடுவிக்கும்வரை எங்களுக்கு ஒரே பயம். எங்காவது ஆபத்து ஏற்பட்டிருந்தால் விஷயம் வெளியாகி நல்ல உதை கிடைக்குமே. வீராசாமியும் நானும் எங்கள் பெற்ருேர் களோடு பள்ளி விடுமுறை சமயத்தில் திருச்சிரர்ப் பள்ளிக்கு அருகிலுள்ள் ஒரு கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு விருந்தாகச் சென்றிருந்தோம். அங்கே தான் இந்தப் பறக்கும் சோதனை நட்ந்தது. வேறி உத்தில் வைக்கோற்போர் அவ்வளவு வசதியாகக் கிடைக்குமா? - - சிறு வயதில் ஏற்பட்ட அந்த அனுபவம் வீரா சாமியின் விஞ்ஞான் உற்சாகத்தைக் குறைத்துவிட வில்லை. எனக்கு மட்டும் வேண்டிய கருவிகள் எல்லாம் கிடைத்தால் இன்றைக்கே பறந்து காட்டு வேன்' என்று இன்றும் சொல்லிக் கொண்டிருக் கிருன். . ஆனல் யந்திரமில்லாமலேயே பறக்கும் அந்த ஆராய்ச்சியை வீராசாமி மேலே தொடர்ந்து செய்ய வில்லை. எந்த முயற்சியையும் தொடர்ந்து செய்யும் துர்க்குணம் அவனிடத்தில்ே கிடையாது. அவ்வப் பொழுது பத்திரிகைகளிலே அடிபடும் விஞ்ஞான ஆராய்ச்சி விஷயத்திலே மனதைச் செலுத்துவான். அதைப்பற்றிச் சதா பேசிக்கொண்டிருப்பான். மேகங்களை நாம் விரும்பிய இடத்திற்குக் கொண்டுவந்து மழை பொழியுமாறு செய்வதற்கு ஒரு முயற்சி நடந்துகொண்டிருக்கிறதல்லவா? அதைப் புற்றிய விபரம் முதன் முதலிலே பத்திரிகையில் வந்த அடன் வீராசாமி ஆவேசம் கொண்டவன் போல இறுகொண்டெழுந்தான். வருண பகவானேடு இநரடியாக அவன் பேச்சு வர்த்தை நடத்திக்கொண்