பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தங்கச் சங்கிலி அதுதான் யுகப் பிரளயம், ரஷ்யாவிலே ஹைடிரஜன் குண்டு தயாரித்துவிட்டதாக இன்று சேதி வந்திருக் கிறது. அதை நான் தடுத்தே ஆகவேண்டும்’ என்று: அவன் ஆத்திரத்தோடு பேசினன். உணர்ச்சிக் கொந்தளிப்பினலே அவ்ன் உட்ம் .ெ பல் லாம் துடித்தது. - "எப்படித் தடுக்கப் போகிருய்?’ என்று நான் கேட்டேன். ஹைடிரஜன் குண்டை நான் கண்டுபிடித்தாக வேண்டும். அதுதான் உலகத்தைக் காப்பாற்ற வழி. வேறே வழி கிடையாது” என்று அவன் எழுந்தான், "நீயும் கண்டுபிடித்து விட்டால் இரண்டு குண்டும் சேர்ந்து சீக்கிரம் உலகத்தைப் பொசுக்கி விடுமே?” என்று கவலையோடு கேட்டுக்கொண்பேர் நான் அவனைத் தொடர்ந்து ஓடினேன். - "அடே, முட்டாள், என் பின்னலே வராதே; ரஷ்யா கண்டு பிடித்ததென்று சொன்னல் இன்னும் இல்லை என்று அர்த்தம். அந்த தேசத்திற்கு முந்தித் கொண்டு நான் கண்டு பிடிக்க வேண்டும். இல்ல்ர் விட்டால் பிரளயத்தைத் தவிர்க்க முடியாது’ என்று கூறிக்கொண்டே அவன் வேகமாக மறைந்தி விட்டான். . . .ثيّ يزة : ه இன்று காலையிலே அவனைப் போலீஸார் கைது செய்த செய்தி கேட்டு நான் திடுக்கிட்டுப் போனேன் உடனே அவனைக் காண ஓடினேன். விஷயம் அவ் வளவு தூரத்திற்குச் செல்லுமென்று நான் எதிர் பார்க்கவில்லை. - ஹைடிரஜன் குண்டு கண்டுபிடிக்க உடன்ே எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டு. மென்றும், அதற்குச் சம்மதம் தெரிவித்து நேற்ழ் மாலைக்குள் கடிதம் வராவிட்டால் இன்று காஷ்