பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போராட்டம் g7 மரணம்தான். காய்ந்த களிமண் உருண்டைகளை வில்லில்ே வைத்துக் குறி தவருது அடிப்பதில் அவன் நாளடைவில் கைதேர்ந்தவனகிவிட்டான். சிட்டுக்குருவி முதல் மயில் வரையில் சிறிதும் பெரிது மான எந்தப் பறவையும் ஆணும் பெண்ணுமாகக் கொஞ்சிக் குலாவிக்கொண்டு அவன் முன்னே தென் படக் கூடாது. ஜோடியாக வீற்றிருக்கும் பறவை களைத் தற்செயலாக் அவன் பார்க்க நேரிட்டபோது ஆரம்பத்திலே கண்களைப் பொத்திக்கொண்டான். உடலிச்சையை நினைவிற்குக் கொண்டு வரும் அம் மாதிரியான காட்சியைப் பாராமல் கண்ணை மூடிக் கொள்வதும் கொஞ்ச நாளில் அவனுக்கு திருப்தி யளிக்கவில்லை. அத்னல் பெட்டை இனத்தையே அழித்துவிடுவதென்றுகங்கணம் கட்டிக்கொண்டான். பெண்ணினத்தின் மேலிருந்த இந்த வெறுப்பு, பறவை ஜாதியோடு நில்லாமல் விலங்கினத்தின் மேலும் பாய்ந்தது. ஒருநாள் அதிகாலையிலே அவன் குளிப்பதற்காக அருகிலே ஒடிய காட்டாற்றிற்குச் சென்றன். அங்கே ஓரிடத்திலே கலைமானென்று தன் துணையோடு அன்பு செய்துகொண்டிருப்பதை அவன் பார்க்க நேரிட்டது. கோபமும் வெறுப்பும் அவன் உள்ளத்தில் குமுறிக் கொந்தளித்தன. விலங்குகளிலும் பெண்ணினத்தைக் கருவறுத்துவிட வேண்டும் என்று அன்று முதல் சங் கற்பம் செய்துகொண்டான். கடினமான மரக் கொம்புகளைக் கூராக்கி அம்பு களாக உபயோகிக்கவும், அவற்றின் முனையிலே மிகக் கொடிய விஷத்தைத் தோய்த்து வைக்கவும் அவன் கற்றுக்கொண்டான். ஓயாத முயற்சியால் இவை இயல்லாம் எளிதாகக் கைவந்தன. அதனல் புவி, இங்கம் முதலிய துஷ்ட மிருகங்களும் அவன் அம்புக்கு இரையாய்க்கொண்டிருந்தன. - & . 7 پایه