பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தங்கச் சங்கிலி ஆனால், அவன் கொல்லக் கொல்ல எங்கிருந்தோ பெண் பறவைகளும் பெண் விலங்குகளும் வந்து கொண்டே யிருந்தன. காட்டில் காமதேவனுடைய ஆட்சி ஒய்ந்து போய் விடவில்லை. ஆனல், அவன் பல நாட்கள் நாள் முழுவதும் வில்லுங் கையுமாகத் திரிந்துகொண்டிருக்க வேண்டியதாயிற்று. பெண் இனத்தைக் கொன்ருெழிப்பதே அவன் மதமாகிவிட்டது. பட்டணத்திலே மானிடப் பெண் களே அவன் மனத்திலேயே வெறுத்துச் சபித்துக் கொண்டிருந்தான் ; ஆனால், இங்கே அவன் அந்தப் பெண் இனத்தையே வேருடன் களையக் கொலைத் தொழிலில் ஈடுபட்டான். * பகலெல்லாம் இவ்வாறு போராடிவிட்டுக்களைப் போடு அவன் தனது குகையை அடைவான். இர வெல்லாம் உள்ளத்திலே இதே போராட்டந்தான். சில சமயங்களில் அவன் துரக்கத்திலிருந்து திடுக் கிட்டு எழுவான். உள்ளத்திலே தோன்றிய உடல் சம்பந்தமான க ன வு க ளை யு ம் கற்பனைகளையும் நினைத்துத் தன்னைத்தானே வெறுத்துக்கொள்ளு வான். பிறகு விடியுமளவும் உறங்காது உடலை வருத்தி உள்ளத்தை இறைவனது சிந்தனையில் லயிக்கச் செய்ய முயல்வான். இவ்வாறு பல மாதங்கள் கழிந்தன. வசந்த காலத்திலே ஒருநாள் மாலை நேரம். எங்கிருந்தோ ஒரு இளநங்கை அந்தக் காட்டினுள் புகுந்து அவ னுடைய குகையின் எதிரிலே காட்சியளித்தாள். இளமையின் வனப்பு அவளுடைய ஒவ்வொரு அவய வத்திலும் ததும்பிக்கொண்டிருந்தது. அவளைக் கண்டதும் அவன் முதலில் திடுக்கிே டான். எதிர்பாராமல் அவளைக் காண நேர்ந்ததால் விளைந்த திகைப்பு மறுகண்த்தில்ே பெண்ணின்த்தின்