பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தங்கச் சங்கிலி வதா அல்லது சகோதர வாஞ்சை என்று சொல்லு வதா என்று யாருக்குமே புரியவில்லை. நானும் பல் பேரிடம் அதைப்பற்றிப் பிரஸ்தாபித்திருக்கிறேன் எல்லோருக்கும் அது ஒரு வியப்பாகவே இருந்தது எனக்கென்னவோ அதைக் காதல் என்று கூறவேண்டு: மென்றுதான் தோன்றுகிறது. ஆனல் அதைப்பற்றி இப்பொழுது எண்ணிக் கொண்டிருக்க வேண்டிய தில்லை. நான் கூறிவரும் வரலாற்றை முற்றிலும் கேட்ட பிறகு அதை நீங்களே தீர்த்துக்கொள்ளுங் கள். உங்கள் சந்தேகத்திற்கும் வாக்குவாதத்திற்கும் விடையாகவும் அது அமையலாம். ராமக்காளைப் பார்த்ததுமுதல் செல்லப்பன் அவ ளுடனும் அவள் தாயுடனும் நெருங்கிப் பழகலா ன்ை. அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யச் சமயம் வாய்க்க வேண்டுமென்று ஆவலோடு எதிர்பார்த் திருப்பான். அவர்கள் குடியிருந்த குடிசைக்கு அடிக் கடி போவான். நாள்தோறும் அவர்களுக்குப் பால் கொண்டுபோய்த் தருவான். அதற்குப் பணம் வாங் கிக்கொள்ள அவன் அறவே மறுத்துவிட்டான். அன்பு உணர்ச்சியையே அறியாது வறண்டுகிடந்த அவன் உள்ளத்திலே அவ்வுணர்ச்சி திடீரென்று வெள்ளம்போலப் பொங்கி எழுந்தது. அவன் ஒரு புது மனிதனைன். உலகமே ஒரு புது இன்பத்தோடு அவனுக்குக் காட்சியளித்தது. ராமக்காள் அவனிடம் காட்டிய அன்பு அப்படிப் பெரிய மாறுதல் உண்டு பண்ணிற்று. - தன்னிச்சையாக யாதொரு கவலையுமின்றித் திரிந்துகொண்டிருந்த அவன் இப்பொழுது அந்தக் கிழவிக்கும் அவள் மகளுக்குமாகப் பவவிதமான கவலைகளையும் கடமைகளையும் மேற்கொண்டான். அவற்றிலே அவனுக்கு இன்பம்கிடைத்தது. கிழவி ஒரு சமயம் காய்ச்சலாகப் படுத்துவிட்டாள். ராமக்கா