பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தங்கச் சங்கிலி டில்லை ; தலையில் வைக்கப் பூவில்லை. இவையெல்லாம் இல்லாமல் என்னைப் பார்க்க உனக்குச் சகிக்காது : என்று அவள் மறுமொழி தந்தாள். அவன் மேலும் தேம்பித் தேம்பி அழுதான். அடுத்த கணத்திலே இருவரும் நடந்ததெல்லாவற்றையும் மறந்துவிட்டுக் குழந்தைகளைப்போல உரையாடலானர்கள். ராமக்காள் செல்லப்பனைப் பத்து நாட்களுக்கு ஒருதரமாவாது சந்திப்பதை நிறுத்தவே இல்ல்ை. எத்தனை உதை, எத்தனை வசவு எல்லாவற்றையும் அவள் மெளனமாகப் பொறுத்துக்கொண்டாள். செல்லப்பனுக்கும் அதைப்பற்றித் தெரியாதவாறு நடந்தாள். அவள் உள்ளத்திற்கு அந்தத் திடம் இருந்தது. ஆனால், உடலுக்கு அவ்வளவு வன்ம்ை இருக்கவில்லை. அது மெலிய ஆரம்பித்தது. * ..., இருந்தாலும் அவளுடைய இயற்கை அழகு மறைந்து போய்விடவில்லை. நெடுநாளுக்குத் தான் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் அவள் உணர்ந்திருந்தாள். இடதுபக்கத்து விலா எலும்பிலே தீராத ஒரு வலி ஏற்பட்டது. ஒருநாள் வீரப்பன் அவள் மார்புக்கும் கீழே அள்ளைப் புறத்தில் ஓங்கிக் குத்தியதிலிருந்து இந்த வலி அதிகரித்தது. அதைப் பற்றி அவள் யாரிடமும் குறிப்பிடவில்லை. உயிருக்குப் பயந்து செல்லப்பனைக் காணச் செல்லுவதையும் நிறுத்தவில்லை. வீரப்பன் குடிகாரன் மட்டுமல்ல ; அவன் ஒரு மிருகம். அவனுக்கு அவனுடைய சுகந்தான் பெரிது. ராமக்காளைத் தனது ஆசைப் பொருளாக அவன் உபயோகித்து வந்தான். ராமக்காள் அவன் னிலையிலே உயிரற்ற யந்திரமாகிவிடுவாள். யந்திர் போல அவள் ஒருவிதத் தவறுமின்றி அவனைத் திருப்தி செய்து வந்தாள். அவ்வளவுதான்.