பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது காதல்? 117 பூரித்தேன். உங்களுக்குத் துரோகம் செய்யவில்லை என்ற களிப்போடு தெய்வத்தை வாழ்த்திக்கொண்டு திரும்பினேன். ஆனால், இனி நான் உங்களுக்குச் சொந்தமில்லை. நான் பிழைக்க முடியாது. என் உயிர் போகும் முன்பு நீங்கள் இந்த ஊரைவிட்டுப் போய் விடுங்கள் என்று நிதானமாகப் பேசிள்ை. அதன் பிறகு அவள் பேசவே இல்லை. வீரப்பன் நெஞ்சம் முறிந்து எங்கேயோ ஒடிப் போய்விட்டான். அவனைத் தேடிய வண்ணம் செல்லப்பன் ஊர் ஊராய் அலைந்துகொண்டிருக்கிருன். அவன் நெஞ் சிலே என்ன எண்ணம் குமுறிக்கொண்டிருந்ததோ யாரும் அறியார்கள். பழி வாங்க நினைக்கிருன அல்லது வேறு எண்ணத்தேர்டு தேடுகிருன என்று ஒருவரும் அறிய முடியவில்லை.” இவ்வாறு நான் கூறிக் கதையை முடித்தேன். நண்பர்கள் இருவரும் சிலைகளைப் போல உணர்ச்சி பால் கட்டுண்டு அமர்ந்திருந்தார்கள். காதலின் போக்கையோ அதன் விசித்திரங்களையோ மேற் கொண்டு பேச என்க்கும் விருப்பம் ஏற்படவில்ல்ை. அவர்களும் பேசவில்லை.