பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ெ ம ள ன ம் வேலாத்தாளுக்கு மேல் மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறது. இனிமேல் அவள் பிழைப்பா ளென்று எண்ணுவதற்கு யாதொரு நம்பிக்கையு மில்லை இந்த நிமிஷமேர் அடுத்த நிமிஷமோ உயிர் பிரிந்துவிடும் என்ற நிலைமை வந்துவிட்டது. அவள் இறப்பதைப் பலபேர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆ ன ல் அந்த ஆவல் மனசுக்குள்ளேயே மறைமுகமாகத்தான் இருந்தது. வெளிப்படையாக இப்படிப்பட்ட ஆ ைச ைய க் காட்டிக்கொள்ளலாமா? உண்மையைச் சொல்லப் போனல் வேலாத் தாளின் நல்லுயிர் போய் நாற்பது ஆண்டுகளா கின்றன. அதாவது அவள் கழுத்தில் என்றைக்கு ஒருவன் தாலி கட்டினனே அன்றைக்கே அவள் இறந்து விட்டாள். அவள் காதல் குலைந்து விட்டது. அத்துடன் அவள் வாழ்வும் மறைந்து விட்டது. ஆனால் ஊரிலுள்ள மக்கள்மட்டும் வேலாத்தாளை அதிர்ஷ்டக்காரியென்று கொண்டாடி ஞர்கள்; அவள் மேல் பொருமையும் கொண்டார்கள். பெற்ருேர்களுக்கோ தங்கள் மகளை ஒரு பெரிய தன வந்தனுக்குக் கல்யாணம் செய்துகொடுத்துவிட்டதில் பரம திருப்தி. முக்கியமாக வேலாத்தாளின் தாயார் பெருமை பேசிக் கொண்டதற்கும் அடைந்த கர்வத் திற்கும் அளவே இல்லை. -. - ராமப்பனுக்கு நன்செய் புன்செய் நிலங்கள் உண்டு. அதோடு ஆயநல்லூரிலும் அதைச் சுற்றி யுள்ள ஊர்களிலும் அவன் வைத்தது சட்டம், சிறு