பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தங்கச் சங்கிலி இருக்கும் வரையில் கிடைக்கும் வரும்படியை நமக்குக் கொடுக்கலாமல்லவா? அவள் அத்தனை வரும்படியையும் என்ன செய்யப் போகிருள்? என்றிப்படித் தாயார் யோசிக்கலானள். அவள் வேலாத்தாளுடைய வீட்டிலேயே பெரும் பாலும் இருக்கத் தலைப்பட்டாள்; யாராவது அங்கே வந்தால் அவர்களிடம், "என் மகள் தலைவிதி இப்படி ஆய்விட்டது. அவள் தனியாக இருந்துகொண்டு எப் பொழுதும் துக்கப்பட்டுக் கொண்டிருப்பாளே என்று நான் இங்கேயே இருக்கிறேன்” என்று இப்படிச் சொல்லிக்கொண்டு ஒரு அரை நாழிகை அழத் தொடங்குவாள். தாயார் அழுது கண்ணிர் வடிக்கும்போதெல் லாம் வேலாத்தாள் முகம் வெறுப்பால் இருளும், உதடுகள் உள்ளத்திலே குமுறும் உணர்ச்சிகளை வெளி யில் கொட்ட ஆத்திரப்படுவதுபோல் துடிக்கும். ஆனல் சற்று நேரத்திற்கெல்லாம் பழையபடி மரக் கட்டையைப்போல உயிரற்றதாக மாறிவிடும். தாயின் துக்கம் அவள் மனத்தை இளகச் செய்யவே இல்லை. ராமப்பன் இறந்த சமீபத்தில் தினமும் யாரா வது சிலர் வேலாத்தாளுக்கு ஆறுதல் சொல்ல வரு வார்கள். வேலாத்தாள் வந்தவர்களை வரவேற்கும் பாவனையில் பாயை எடுத்து விரிப்பாள். அவர்கள் உட்கார்ந்ததும் தானும் சற்று தூரத்தில் உட்காரு வாள். வேலைக்காரி வெற்றிலை பாக்குக் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போய்விடுவாள். வந்தவர்கள், வெற்றிலையை மென்றுகொண்டே தங்களுக்குள் பேசிக்கொண்டால் உண்டு; அல்லது வேலாத்தாளின் தாயார் இருந்தால் அவளுடன் பேசலாம்; வேலாத் தாளைத் தங்களிடம் பேசவைப்பதுமட்டும் முடியாது;