பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெளனம் 123 அவள் மெளனமாகவே வந்தவர்கள் போகும்வரை அமர்ந்திருப்பாள். . வேலாத்தாளுக்குக் கல்யாணம் ஆனதும் அவ ளேக் காதலித்த கந்தப்பன் ஊரைவிட்டு எங்கேயோ போய்விட்டான். யாருக்கும் அவன் போன இடம் தெரியாது. அவனுடன் பிறந்த சகோதரர்கள் இரு வரும் கொஞ்சகாலம் அங்குமிங்கும் தேடிப் பார்த் தார்கள்; துப்பு விசாரித்தார்கள். ஒன்றும் பலன் கிடைக்கவில்லை. அதனுல் அது அவன் தலைவிதி: ஊரைவிட்டு ஒரு காரண்முமில்லாமல் ஓடச்செய்தது' என்று கூறிக்கொண்டு இருந்துவிட்டார்கள். ஆவர் களுக்குக் கந்தப்பன் மறைந்ததின் ரகசியம் தெரியாது. o காலம் நழுவ நழுவ அனைவருள்ளத்திலும் அவனைப்பற்றிய நினைவு மங்கிவிட்டது. ஆல்ை வேலாத்தாளுடைய உள்ளம் எப்படி பிருந்ததென்று யாருக்கும் தெரியாது. அது மூடியே கிடந்தது. உள்ளே நுழைந்து பார்க்கும் உரிமை ஒருவருக்கும் கிடைக்கவில்லை. பேச்சிலிருந்து கண்டு கொள்ளலாமா என்ருல் அவள் பேசுவதுதான் கிடை பாதே. கந்தப்பன் மனமுடைந்து எங்கேயோ சென்றுவிட்ட்ான் என்பது அவளுக்குத் தெரியாம இருக்காது. ஆணுல் அதைக் குறித்துத் துக்கித்தாளா. உள்ளம் புழுங்கிளைா என்பதை அவள் தாய்கூட ပြိုး முடியவில்லை. அவள் உள்ளத்திற்கும் வேறு உறுப்புக்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லே பாலிருக்கிறது. இரு ந் த ர ல் கொஞ்சமாவது இணர்ச்சி அலைகளின் அதிர்ச்சி வெளியே தென்பட வண்டாமா? மண்ணில் செய்த உருவம்போல. வள் எப்பொழுதும்; ஒரே மாதிரி தோன்றினள். வேலாத்தாள் விதவையாகிப் பத்து வருஷங் ஆளுக்குப் பிறகு ஆயநல்லூரிலே ஒரு வத்ந்தி கிளம்