பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 தங்கச் சங்கிலி சொல்லத் தன் மெளனத்தைக் கலைத்தாள் என் பதைக்கூடக் கண்டுகொள்ள முடியவில்லை. மறுபடியும் பழைய மெளனம். கிழவி தனது கடுமையான வார்த்தைகளை மாற்றிக்கொண்டு பல முறை நயமாக வார்த்தை சொல்லிப் பார்த்தாள். கந்தப்பனைப்பற்றி அனுதாபமாகவும் பேசினள். ஆனால், மூடிய உள்ளம் திறக்கவில்லை. தன்னுள் அடங்கிய முத்தைப் பத்திரமாகக் காக்கும் சிப்பியைப்போல் அது மூடிக்கொண்டது. வேலாத்தாள் தனது காலத்தை அனுதினமும் ஒரே மாதிரியாகக் கடத்திக்கொண்டு வந்தாள். சிரித்தாளா ? கோபமாகப் பேசிளைா ? ஒன்றுமே கிடையாது. அவளுடைய வருஷ வரும்படியெல்லாம் என்னவாகிறது என்று யாருக்குமே தெரியாது. காசியில் தர்ம சத்திரம் வைத்து நடத்துகிருள் என்ருர் ஒரு சிலர். இராமேசுவரத்தில் கோவில் திருப்பணி செய்கிருள் என்ருர் மற்றுஞ் சிலர். அவள் தனக்குக் கிடைத்தவற்றையெல்லாம் நோட்டாக மாற்றி வைத்திருந்து பேராசைக்காரியான அவள் தாயாரைத் தகனம் பண்ணும்போது அதில் போட்டு விட்டாள் என்று இன்னும் சிலர் பேசிக்கொண் டார்கள். ஆனால், யாருக்கும் நிச்சயமாக ஒன்றும் தெரியாது. - சொத்துக்கு வார்சுதாரர்களுக்கும், மற்ற உற வினர்களுக்கும் அதைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்று மட்டற்ற ஆசைதான். ஆனால், ஒரு வருக்காவது வேலாத்தாளைக் கேட்க மனந்துணிய வில்லை. அவளது மெளனத்திலே அச்சத்தை விளை விக்கும் தன்மை கலந்திருந்தது. மரக்கட்டையைப் போலத் தோன்றிய அவள் முகத்தைப் பார்ப்பவர்