பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடைசி ஓவியம் , 137 அன்பிலே உயர்ந்தது தாயன்பு. அதில்கூடத் தன் பிற்கால வாழ்க்கைச் சுகத்தின் ரேகை படர்ந் திருக்கிறது. குழந்தை பிற்க்ாலத்திலே தன்னைப் பேணுவான் என்ற நம்பிக்கை அவள் உள்ளத்தின் ஆழத்திலே படிந்திருக்கிறது. எவ்விதப் பற்றும் இல்லாத துறவியின் அன்பிலே அதுவும் இல்லை. அது மிக உயர்ந்தது. அந்த அன்பினல் தூண்டப் பட்டு அவர் வந்திருக்கிரு.ர். நான் அவருக்கு வழி விட்டு மரியாதையர்க ஒதுங்கி நின்றேன். அரசரும் என்னைப் பின்பற்றினர். சாமியார் மறுபடியும் கதவைத் தட்டினர். பதிலில்லை. அரசர் - கதவை ஓங்கி இடித்தார். கதவு தானகவே திறந்துகொண்டது. உள்ளிருந்து விளக்கு வெளிச்சம் வெளியே பாய்ந்து எங்கள் உருவத்தைத் தெளிவாக காட் டிற்று. முதலில் சாமியார் வீட்டிற்குள் நுழைந்தார். அடுத்தபடியாக அரசர். அவருக்குப் பின்னல் நான் சென்றேன். ஒவியன் பட ம் தீட்டிக்கொண்டிருந்தான். குழந்தை தாயின்மீது சாய்ந்து பசியால் வாடி வீரிட்டு அழுதுகொண்டிருந்தது. தாய்....? அவள் பிணமாகக் கிடந்தாள். அவள் வயிறு தாய்ந்து முதுகோடு ஒட்டியிருந்தது. அவள் எலும்பும் தாலுமாகக் காட்சியளித்தாள். ஒவியன் எங்களைக் கவனிக்கவில்லை. தன் வேலையி லேயே முழுதும் ஈடுபட்டிருந்தான். ஒவியம் முடியும் தறுவாயில் இருந்தது. அதற்குக் கட்ைசி மெருகுகளை இயல்லாம் செய்துவிட்டுத்தான் அவன் எங்கள் ណ្ណ தி ரு ம் பி ைன். எதிர்பாராத அந்தக் ாட்சியிலே நாங்கள் அதுவரை பேச்சும் செயலும் இழந்து திகைத்து நின்ருேம். ہجو